search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது ". மேயர் மகேஷ்"

    • ஓட்டலில் உள்ள கழிவறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • நாகர்கோவில் மாநகரை சுத்தமான மாநகராட்சியாக மாற்றி காட்ட வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களுடன் மாநகராட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை மாநிலத்தி லேயே முதல் மாநகராட்சி யாக கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். கடந்த 5 மாதங்களில் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஒரு சில ஓட்டலில் உணவு தயாரிக்கும் முறை வேதனை அளிப்பதாக உள்ளது. தெருக்களில் உணவு பொருட்கள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்கப்படு கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. உணவை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாது.

    ஓட்டலில் உள்ள கழிவறை களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நள்ளிரவு கடையில் உள்ள கழிவு பொருட்கள் ரோடுகளில் கொட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரை சுத்தமான மாநகராட்சியாக மாற்றி காட்ட வேண்டும். இதற்காக தூய்மை பணியாளர்கள் முழுமூச்சுடன் செயல் பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏராளமான டீக்கடைகள் உரிமங்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அனைத்து ஓட்டல்கள், டீக்கடைகளிலும் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் பெறாத டீக்கடைகள், ஓட்டல்கள் மீது இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஓட்டலில்மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தற்போது தினமும் 100 டன் குப்பைகள் வருகிறது. இதில் 35 டன் குப்பைகள் மட்டுமே தரம் பிரிக்கப்படுகிறது. 65 டன் குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தான் கொட்டப்பட்டு வருகிறது. பார்வதிபுரம் பகுதியில் ஏற்கனவே டீக்கடையில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க வேண்டும். கடைகளை ஆக்கிரமித்து கட்டக்கூடாது. ஆக்கிரமித்துக் கட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக யாரும் சிபாரிசுக்கு வரக்கூடாது. கடைகளை தொடர்ந்து வீடுகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் ஆனந்த மோகன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்கு மார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநகராட்சி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் குமார பாண்டியன், மாநகராட்சி சுகாதார ஆய்வா ளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், பகவதி பெருமாள், தியாக ராஜன், சத்யராஜ்,ராஜா, நகரமைப்பு அதிகாரி விமலா, ஆய்வாளர் கெபின் ஜாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×