என் மலர்

  நீங்கள் தேடியது "வாலிபர் கைது"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.
  • அந்த வாலிபரை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

  கிருஷ்ணகிரி,

  திருச்சியை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

  இவர் மருத்துவமனையில் பணியில் இருந்த பொது அங்கு வந்த ஒரு வாலிபர் பிரவீன் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். பிரவீன் மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

  போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
  • எஸ்.எஸ்.காலனி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

  மதுரை

  மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (20). சம்பவத்தன்று இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றார்.

  இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (19) மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது.
  • வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  பூந்தமல்லி:

  பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 34), இவரது வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது. முட்புதரில் வளர்ந்து இருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்து வினோத்தை கைது செய்தனர்.

  அவர் போதைக்காக கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்த்து வந்தது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
  • மேலும் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.

  ஓசூர், 

  ஓசூர் டவுன் போலீசார், தளி ரோட்டில் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.1 25,000- மதிப்புள்ள குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

  இதனை, பெங்களூரி லிருந்து திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி பகுதிக்கு காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் ஆதவன் (25) என்பவரை கைது செய்தனர்.

  மேலும் தலைமறை வாகிவிட்ட வந்தவாசி பகுதியை சேர்ந்த தாமோதரன், ராஜி, ஹரி, சஞ்சய், சூரியா, சரத் ஆகிய 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஸ்ஸில் இருந்த வாலிபர் சத்தியவாணி கையில் வைத்திருந்த மணிபர்ஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினார்.
  • வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தருமபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

  தருமபுரி, 

  தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே தம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மனைவி சத்தியவாணி (33).

  இவர் கணவருடன் தருமபுரிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பு வதற்காக கடைவீதியில் இருந்து டவுன் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார்.

  அப்போது அவரது கழுத்தில் இருந்த செயின் அருந்ததால் அதை தனது பர்சில் வைத்துக்கொண்டு தம்மனம்பட்டி செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார்.

  பஸ்ஸில் கூட்ட நெரிசல் இருந்தது. அப்போது பஸ்ஸில் இருந்த வாலிபர் சத்தியவாணி கையில் வைத்திருந்த மணிபர்ஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினார்.

  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே பயணிகள் இறங்கி சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தருமபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

  விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சுடு குருமன் பேட் பகுதியைச் சேர்ந்த வினய் குமார் மகன் இம்மானுவேல் (23) என்பது தெரியவந்தது.

  இதையடுத்து மணிபர்ஸை மீட்ட போலீசார் அதை சத்தியவாணியிடம் ஒப்படைத்தனர். இம்மானுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சீனிவாசன், இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார்.
  • சரவணகுமார் சத்தம் போடவே, கோபம் அடைந்த முதியவர், ‘ஒழுங்காக குடும்பம் நடத்து, இல்லையேல் உனக்குத்தான் சங்கடம்’ என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.

  மதுரை:

  மதுரை ஆர்.ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது வீட்டின் அருகே சரவணன் என்ற சரவணகுமார் (28) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

  இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சீனிவாசன், இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். சரவணகுமார் சத்தம் போடவே, கோபம் அடைந்த முதியவர், 'ஒழுங்காக குடும்பம் நடத்து, இல்லையேல் உனக்குத்தான் சங்கடம்' என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.

  கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு முதியவர் சீனிவாசன் வீட்டில் தூங்கினார். அங்கு வந்த சரவணகுமார், பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  இதுகுறித்து சீனிவாசன் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் என்ற சரவணகுமாரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோகன்ராஜ் அசோக்குமாரிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அசோக்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
  • பழனிவேல் என்ற நகைவியாபாரியிடம் ரூ. 3.5 லட்சம், மணிகண்டன்(40) என்ற நகைவியாபாரியிடமும் ரூ.3 லட்சம் மோசடி செய்துள்ளார்.

  கோவை:

  கோவை ராமநாதபு ரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(42). நகை வியாபாரி. இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார்(38) என்பவர் கடந்த 18-ந் தேதி மோகன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டார்.

  அப்போது அவர், நான் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகை அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டெடுப்பதற்கு ரூ.1 லட்சம் குறைவாக உள்ளது. அதனை கொடுத்தால் நகையை மீட்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

  இதனை நம்பிய மோகன்ராஜ் அசோக்குமாரிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அசோக்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.

  அசோக்குமார் ரூ.1 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அசோக்குமாரை தேடி வந்தனர்.

  இதேபோன்று காந்திபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்ற நகைவியாபாரியிடம் ரூ. 3.5 லட்சம், ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன்(40) என்ற நகைவியாபாரியிடமும் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அசோக்குமார் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

  3 பேரிடமும் தொழில் ரீதியான பழக்கத்தில் ஒரே மாதிரி பேசி அசோக்குமார் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அவர் பலரிடமும் இது போல் மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

  இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த அசோக் குமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

  மேலும் இவர் கோவையில் தங்கி இருக்கும் போது பழைய நகையை வாங்கி விற்பனை செய்யும் நகை வியாபாரிகளிடம் பழகியுள்ளார். அதன் மூலம் நகை வியாபாரிகளிடம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டு குறைந்த விலைக்கு தருவதாக கூறி நூதன மோசடி ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அசோக்குமாரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • மது போதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

  மதுரை

  அவனியாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த குமரவேல் மகன் செல்வகுமார் (வயது 20). இவர் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

  அப்போது ஒரு சிறுமி நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தார். செல்வகுமார் அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

  இது குறித்து சிறுமியின் பெற்றோர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜோதிடம், மாந்திரீகம், போன்றவற்றை வீட்டில் வைத்து விமலாதேவி செய்து வருகிறார்.
  • மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வாலிபர் தப்பிசென்றார்.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வசிப்பவர் விமலாதேவி ( வயது 58) .இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் ஜோதிடம், மாந்திரீகம், போன்றவற்றை வீட்டில் வைத்து செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 4ந்தேதி, இவரது வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் திருமண தோஷம் கழிக்க மந்திரித்து கயிறு கட்ட வேண்டுமென வந்துள்ளார்.

  வீட்டை நோட்டமிட்ட அவர் மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, திடீரென மூதாட்டியின் வாயில் துணி வைத்து அடைத்து அவரை, அங்கிருந்த சேரில் உட்கார வைத்து கயிற்றினால் கட்டி போட்டுவிட்டு, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.

  விமலாதேவி இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் கணபதிபாளையத்தில் விமலாதேவியை கட்டிப்போட்டு நகைகள் திருடியது தெரிய வந்தது .இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சசி மகன் சாஜன் லால்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.
  • பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

  பண்ருட்டி:

  கடலூர் பண்ருட்டி பலாப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

  அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இளங்கோவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இளங்கோவன் அதற்கு மறுத்துவிட்டார்.

  எனவே இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து வாலிபர் இளங்கோவனை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
  • போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர்.

  அந்தியூர்:

  அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கால்வாரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (32). இவர் வீட்டில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

  பின்னர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

  கோபி:

  கோபிசெட்டிபாளையம அருகே கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

  இதையடுத்து ஒட்டர்பாளையத்தை சேர்ந்த மோகன் குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.