search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parents protest"

    • பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட பூசாரிப்பட்டி, குருந்த ம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் குருந்தம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூசாரி ப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து மாண வர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கையில்,

    தங்கள் குழந்தைகள் குளிக்காமலும், சரியான உடைகளை உடுத்தி வராமலும் பள்ளிக்கு வருவதால் அவர்கள் மீது துர்நாற்றம் வீசுவதாக ஆசிரியர்கள் கேலி, கிண்டல் பேசி உள்ளனர். இதனால் மற்ற மாணவர்களிடமும் அவர்கள் சேர்ந்து விளையா டவோ, சாப்பிடவோ முடியாமல் தனித்து விடப்பட்டுள்ளனர்.

    கிராமப்புரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நாகரீகமான உடை அணிந்து எப்படி வருவார்கள். சாதாரண உடையில் தான் பள்ளிக்கு வரமுடியும். ஆனால் அவர்களை ஆசிரியர்களே கேலி செய்தால் மாணவர்கள் எவ்வாறு நடத்துவார்கள்.

    எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனையடுத்து புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்களிடம் விசா ரணை நடத்த அதிகாரி களுக்கு பரிந்துரைக்கப்டும் என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களை பள்ளிக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.

    இதனையடுத்து கிராம மக்கள் குழந்தைகளை பள்ளி அனுப்ப ஒத்து க்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில். திண்டுக்கல், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 பேர் படித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் பள்ளியின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக கூறி இன்று பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த காந்திகிராமம் பல்கலைகழக வளாகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. திண்டுக்கல், வத்தலகுண்டு பட்டிவீர ன்பட்டி அய்யம்பாளையம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 பேர் படித்து வருகின்றனர். பள்ளி முதல்வராக டாக்டர் முருகேஸ்வரன் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் பள்ளியின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக கூறி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பள்ளியின் நிர்வாக குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய அரசு தலையிட கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பர்கூர் பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    • இன்று காலை உணணாவிரதம் இருக்க மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 1961-ம் ஆண்டு பழங்குடியினர் உண்டு உறைவிட தொட க்கப்பள்ளி தொடங்கப்ப ட்டது.

    இப்பள்ளி யானது 1993-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளி யாகவும், 2009-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2016-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த மேல்நிலைப்பள்ளியில் 380 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தொடக்க காலம் முதலே, ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருவதாக கூறப்படு கிறது. 380 பேர் படிக்கும் இந்த பள்ளியில் 11 வகுப்புகள் செயல்படுகி ன்றன. இந்த 11 வகுப்புக ளுக்கும் ஒரே ஒரு தமிழா சிரியர் மட்டுமே உள்ளார். அதேபோல ஆங்கில பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

    மேல்நிலைப் பள்ளிக்கு தமிழ்,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கு இதுவரை ஆசிரியர் பணியி டங்களே உருவாக்கப்பட வில்லை. இவ்வாறாக இந்த பள்ளியில் 10 ஆசிரியர் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத 5 பணியிடங்களும் உருவாக்கப்படப் பட வில்லை.

    இந்த பணியிடங்களை உடனடியாக உருவாக்கி, உரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி 2017-ம் ஆண்டு இப்பள்ளி மாணவ மாணவிகளும், பெற்றோ ர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் ஒன்றி ணைந்து ஒரு நாள் அடை யாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக முறையீடுகள் அனுப்பப்பட்டன.

    இந்த ஒரு பள்ளி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 17 மாவட்ட ங்களில் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடத்த ப்படும் 320 பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்மை, இப்பள்ளி களை கண்காணி ப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இன்மை உள்ளி ட்டவை குறித்து கல்வியா ளர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    அதன் அடிப்படையில் அரசு ஆய்வு மேற்கொண்டு, நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வரப்படும் எனும் அறிவிப்பை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தது.

    அந்த அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்தினால் தான் இந்த பிரச்சினை தீரும்.

    எனவே அந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த கோரியும், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பர்கூர் பஸ் நிலையம் அருகில் உண்ணா விரதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை உணணாவிரதம் இருக்க மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    அப்போது அவர்களிடம் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். பர்கூர் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் பாலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரி க்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    மேலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள், மாணவ, மாணவி கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வாணியம்பாடியில் கழிவறையில் மாணவியை பூட்டிச் சென்றதால் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 220-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த நதீம்பாபு என்பவரது மகள் ஷாஜீயா (வயது 5). 1-ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று பள்ளிக்கு சென்ற ஷாஜீயா மாலை உடல்உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றார்.

    அப்போது பள்ளி நேரம் முடிவடைந்ததால் ஆசிரியர்கள் வகுப்பறையை பூட்டிவிட்டு பின்னர் சிறுமி கழிவறையில் இருப்பது தெரியாமல் கழிவறையையும் பூட்டிச் சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து சிறுமி கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் வெளிபக்கம் தாளிட்டு இருந்ததால் சிறுமியால் கதவை திறக்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அனைவரும் பள்ளியை விட்டு சென்று விட்டதால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் செய்வதறியாமல் சிறுமி அழுது கொண்டிருந்தார்.

    வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் பதறிய பெற்றோர் பள்ளிக்கு வந்து சிறுமியை தேடிபார்த்தனர்.

    அப்போது கழிவறையில் இருந்து சிறுமியின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கழிவறையை திறந்து பார்த்தனர். அங்கு சிறுமி நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சிறுமியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும் அங்கு திரண்டு வந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியர்களின் கவனகுறைவால் சிறுமி கழிவறையில் சுமார் 1 மணி நேரம் தவித்ததாகவும், இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பெற்றோரிடையே பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×