என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர்கள்"

    • பலுசிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
    • குற்றக் கும்பல்கள் பலூச் விடுதலை ராணுவம் அமைப்பின் பெயரில் செயல்படுகின்றன.

    பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் ராணுவம், போலீஸ் ஆகியோரை குறிவைத்து ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பெண்கள் அடங்கிய தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதல்களில் 280 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அமைப்பு தெரிவித்தது. மேலும் நுஷ்கி மாவட்டத்தில் முக்கிய நிலைகளைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர். ஆனால் பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்ததாகவும், 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

    இந்தநிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூறியதாவது:-

    பலுசிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளனர். மாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    புவியியல் ரீதியாக பாகிஸ்தானின் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை பலுசிஸ்தான் கொண்டு உள்ளது. அதை கட்டுப்படுத்துவது என்பது மக்கள் தொகை நிறைந்த நகரத்தை கட்டுப்படுத்துவதை விட மிகவும் கடினமானது.

    அதற்குப் பெருமளவிலான படைகளை நிலை நிறுத்த வேண்டும். நமது துருப்புக்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய பகுதியை பாதுகாத்து ரோந்து செய்வதால் ராணுவ வீரர்கள் உடல் ரீதியாக பலவீனமாக உள்ளனர்.

    பெண்கள்,குழந்தைகள் உள்பட பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது. குற்றவாளிகளுக்கும் பிரிவினைவாதக் குழுக்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. குற்றக் கும்பல்கள் பலூச் விடுதலை ராணுவம் அமைப்பின் பெயரில் செயல்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 முதல் 6 அடி ஆழத்திற்குப் பனி குவிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
    • சுமார் 38 கி.மீ தூரத்திற்கு மூடிக்கிடந்த பனியை இரவு பகலாக அகற்றினர்.

    ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தோடா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 40 ராணுவ வீரர்கள் மற்றும் 20 பொதுமக்கள் என மொத்தம் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    தோடா மாவட்டத்தில் உள்ள சத்தர்காலா கணவாய் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவியது. கடல் மட்டத்திலிருந்து 10,500 அடி உயரத்தில் உள்ள இந்தப் பகுதியில் சுமார் 40 மணி நேரம் இடைவிடாது பனி கொட்டியது.

    இதனால் 5 முதல் 6 அடி ஆழத்திற்குப் பனி குவிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜனவரி 24 முதல, எல்லை சாலைகள் அமைப்பு (BRO) அதிகாரிகள் சுமார் 38 கி.மீ தூரத்திற்கு மூடிக்கிடந்த பனியை இரவு பகலாக அகற்றினர்.

    இந்நிலையில் அங்கு சிக்கியிருந்த 4 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுடன் அங்கிருந்த 20 பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இதேபோல், ராஜௌரி மாவட்டத்தின் கண்டி-கோத்ரங்கா பகுதியிலும் 35 கி.மீ தூரத்திற்குப் பனியை அகற்றி BRO அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர் செய்துள்ளனர்.

    இதற்கிடையே  உதம்பூர் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள். 

    • மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது.
    • வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது. அப்போது பதேர்வா - சம்பா சாலையில் உள்ள கன்னி டாப் என்ற இடத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து நடந்த உடனேயே, காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவதற்காக ராணுவம், காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. உள்ளூர் மக்களும் உதவியுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    படுகாயமடைந்த சில வீரர்கள் சிறப்பு சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஆறு வீரர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. 

    "தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நமது துணிச்சலான வீரர்களின் சிறந்த சேவை மற்றும் உயர்ந்த தியாகத்தை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    • சமூக வலைதளங்களில் செய்திகளைப் பார்க்க, கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் கசிவு, தவறான தகவல் பரவல், சைபர் உளவு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களைப் பாதுகாப்பதற்காக காலத்திற்கு ஏற்ப விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராணுவத்தினர் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் செய்திகளைப் பார்க்கவும், கண்காணிக்கவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

    ராணுவ நடவடிக்கைகள், படை நகர்வு, பயிற்சி விவரங்கள், ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட அதிகாரபூர்வ அல்லது உள்துறை தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதைத் தடுக்கவே இந்த முடிவு என தெரிவித்துள்ளது.

    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
    • இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள், ஒரு அமெரிக்க உரைபெயர்ப்பாளர் என 3 அமெரிக்கர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

    இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த நபர் நடத்தியதாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்தது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சிரியாவில் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு ஆபத்தான பகுதியில் ஐ.எஸ் நடத்திய தாக்குதல் இதுவாகும். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தச் சம்பவத்தால் சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார். சிரியா அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போராடி வருகிறது" என்றார்.

    • பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.
    • சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.

    ஆபரேஷன் சிந்தூரின்போது தாரா வாலி என்ற கிராமம் அருகே சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு குடிநீர், ஐஸ்கிரீம், பால், லெஸ்சி போறவற்றை கொடுத்து சவான் சிங் (10) என்ற சிறுவன் உதவியுள்ளார்.

    இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், இந்த சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் (Golden Arrow Division of the Indian Army) அறிவித்துள்ளது.

    • பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் புகுந்து அதனை வெடிக்கச் செய்தான்.

    இதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்களும், 10 அப்பாவி மக்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலில் அங்கிருந்த 6 வீடுகள் சேதமடைந்தன. இதில் 6 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    • ஷர்வன் சிங் என்ற சிறுவன் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளான்.
    • சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.

    ஆபரேஷன் சிந்தூரின்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ஷர்வன் சிங், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி தாகம் தீர்த்துள்ளான்.

    இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

    இதன் பிறகு பேசிய சிறுவன், "வளர்ந்த பிறகு நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்" என்று நெகிழ்ச்சிப் பொங்க கூறினார்.

    • ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
    • நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.

    ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன் .

    என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள் .

    நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.

    ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? என செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு
    • போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ராணுவ வீரர்கள் தொடர்பாக சர்ச்சையாக பேசியது தொடர்பாக செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு ,எங்க பொதுச் செயலாளர் அண்ணன் EPS பாராட்டியுள்ளார் , எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுது மதிக்கிரேன் !!!" என்று பதிவிட்டுள்ளார்.

    • ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
    • திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .

    ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காஷ்மீரின் பனி நிறைந்த பகுதியில் ராணுவ வீரர்களுடன் பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ரீல்ஸ் வீடியோ எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

    ராணுவ வீரர்களை வைத்து பாஜக நிர்வாகி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பதிவில், "காஷ்மீரில், பயங்கரவாதிகள் நமது 28 மக்களை கொன்றனர். இந்த துயர சம்பவத்தால் முழு தேசமும் வேதனையும் துக்கமும் அடைந்துள்ளது. ஆனால், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ரவீந்தர் ரெய்னா வீடியோக்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.

    இந்த துயர சம்பவத்திற்காக ரவீந்தர் ரெய்னா வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு பதிலாக, அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். சமூக ஊடகங்களில் தனது பிம்பத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்த ரவீந்தர் ரெய்னா, "மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக குப்வாராவில் வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும், துணிச்சலான வீரர்களின் உதவியுடன் தான் பாதுகாப்பான இடத்தை அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×