என் மலர்
நீங்கள் தேடியது "Congress பாஜக"
- பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் பனி நிறைந்த பகுதியில் ராணுவ வீரர்களுடன் பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ரீல்ஸ் வீடியோ எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
ராணுவ வீரர்களை வைத்து பாஜக நிர்வாகி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பதிவில், "காஷ்மீரில், பயங்கரவாதிகள் நமது 28 மக்களை கொன்றனர். இந்த துயர சம்பவத்தால் முழு தேசமும் வேதனையும் துக்கமும் அடைந்துள்ளது. ஆனால், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ரவீந்தர் ரெய்னா வீடியோக்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.
இந்த துயர சம்பவத்திற்காக ரவீந்தர் ரெய்னா வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு பதிலாக, அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். சமூக ஊடகங்களில் தனது பிம்பத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்த ரவீந்தர் ரெய்னா, "மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக குப்வாராவில் வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும், துணிச்சலான வீரர்களின் உதவியுடன் தான் பாதுகாப்பான இடத்தை அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும்.
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.
ஜெய்ப்பூர்:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜஸ்தானில் இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெய்ப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும். பா.ஜனதா தான் அடுத்த ஆட்சியை அமைக்கும்.
காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வாக்கு வங்கி அரசியலால் கலவரக்காரர் கள் மீது ராஜஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசோக் கெலாட்டுக்கு சொந்தமாக எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் என்ன உத்தரவாதம் அளிக்கிறார்?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது.
- எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






