ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்- அமித் ஷா உறுதி

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.
ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்- அமித் ஷா உறுதி
Published on

ஜெய்ப்பூர்:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜஸ்தானில் இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெய்ப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும். பா.ஜனதா தான் அடுத்த ஆட்சியை அமைக்கும்.

காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வாக்கு வங்கி அரசியலால் கலவரக்காரர் கள் மீது ராஜஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசோக் கெலாட்டுக்கு சொந்தமாக எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் என்ன உத்தரவாதம் அளிக்கிறார்?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com