என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிபிஐ விசாரணை"
- சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- சுரங்கத்தில் வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை.
உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உள்ளனர்.
சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத்துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மீட்பு பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதற்காக 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை போடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் இந்த குழாய் மூலம் அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, "சம்பவம் நடைபெற்று எட்டு நாட்கள் ஆகிவிட்டன. ஊழியர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. கட்டுமான தளத்தில் சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை வெளியேறுவதற்கான வழி திட்டத்தில் இருப்பின் ஏன் அதனை அமைக்கவில்லை."
"களத்தில் உள்ள மீட்பு படையினர் மற்றும் பொறியாளர்களுக்கு நான் எனது முழு ஆதரவை வழங்குகிறேன். இந்த விஷயத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. பேரிடர் மீட்பு திட்டங்கள் எதுவும் இல்லை, அவர்களிடம் வல்லுனர்கள் யாருமே இல்லை. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று உத்தரகாண்ட் மாநில எதிர்கட்சி தலைவர் யாஷ்பால் ஆர்யா தெரிவித்து இருக்கிறார்.
- வளசரவாக்கத்தில் ரூ.7 கோடி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை நடத்தினர்.
- மாரியப்பன் என்பவரை தேடி போலீசார் சென்ற நிலையில், அவர் 11 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் ரூ.7 கோடி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை நடத்தினர்.
ஹேமலதா மாரியப்பன் என்பவரை தேடி போலீசார் சென்ற நிலையில் அவர் 11 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரது விவரங்களை கேட்டு வாங்கிக்கொண்டு சென்றனர்.
- பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
- வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி:
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இரண்டு பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்தபடி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும், வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். அநேகமாக அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
- விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.
மணீஷ் சிசோடியாவை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று ஆஜராக போவதாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சி.பி.ஐ. விசாரணையின் போது சிசோடியாவை கைது செய்ய உள்ளனர்' என்று தெரிவித்து இருந்தார்.
இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் முக்கிய இடங்கள் மற்றும் சி.பி.ஐ. அலுவகம் முன்பு 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராவதற்காக 10 மணிக்கு தனது வீட்டில் இருந்து மணீஷ் சிசோடியா புறப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. நாங்கள் பகத்சிங் வழி வந்தவர்கள். எனவே சிறைக்கு செல்வதெல்லாம் சாதாரண விஷயம்' என்று கூறி இருந்தார்.
அவர் வீட்டில் இருந்து திறந்த காரில் சென்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காரை சுற்றி நடந்து வந்தனர். 'சிசோடியா சிந்தா பாத்' என்று அவர்கள் முழக்கமிட்டபடி சென்றனர்.
ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி தலைவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
- மணிஷ் சோடியா காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபான ஊழல் டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது.
இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன் இந்த ஊழலில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பெயரும் அடிபட்டு வருகிறது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது.
கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் சாடினார். மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன் இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விசாரணைக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கேட்டிருந்தார்.
இதையடுத்து மணிஷ் சிசோடியா சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், மதுபான ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிபிஐ விசாரணைக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி தலைவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிஷ் சோடியா காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
- ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.
திருப்பதி:
வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிவதற்கு முன்பு இது போன்று ஏராளமானோர் போலி சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் ஆந்திராவில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சிபிஐ அதிகாரிகளின் சோதனையில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை சீனா, ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் இந்தியாவில் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் போலி சான்றிதழ்களை தயாரித்து ஆந்திரா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
போலி சான்றிதழ் பதிவு செய்வதற்கு மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தபோது எப்.எம்.ஜி. தேர்வுக்கான போலி சான்றிதழ்கள் மற்றும் 15 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.
இதேபோல் பீகார் மருத்துவ கவுன்சிலிலும் போலி சான்றிதழ் கொடுத்து பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 7 டாக்டர்களை பிடித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது குற்றம், சதி செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் போலி சான்றிதழ் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.