என் மலர்
நீங்கள் தேடியது "சொத்துகள் முடக்கம்"
- தேசிய புலனாய்வு முகமை பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
- பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
மேலும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த வழக்கில் இதுவரை பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அத்துடன் ரூ.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருந்தது.
இந்நிலையில், பி.எப்.ஐ. மற்றும் அதன் அரசியல் கட்சியுடன் (எஸ்.டி.பி.ஐ.) தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு சொந்தமான மேலும் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலான சொத்துகள் கேரளாவில் உள்ளன. இத்துடன் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடியாக அதிகரித்துள்ளது.
- ஒரு அரசியல் கட்சியின் சொத்துக்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவது இதுவே முதல் முறை.
- ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது.
சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை (ED) விசாரித்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய நடவடிக்கையாக, சுக்மா மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் பவன் அலுவலகம், முன்னாள் அமைச்சர் கவாசி லக்மாவின் ராய்ப்பூர் இல்லம், மற்றும் அவரது மகன் ஹரீஷ் கவாசியின் சுக்மா இல்லம் என மொத்தம் ரூ.6.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் சொத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவது இதுவே முதல் முறை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சுக்மா அலுவலகம் கட்டப்பட்டதற்கான ஒவ்வொரு பைசாவின் கணக்கையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
- நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன.
நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது.
முன்னதாக விசாரணையின்போது," நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நியோ மேக்ஸ்-க்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ரூ.600 கோடி சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
- ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம்.
- ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக, 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
7000 ஏஜெண்டுகளை கண்டறிந்து, மோசடி செய்யும் நோக்கில் பொதுமக்களை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த 500 ஏஜெண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
500 ஏஜெண்டுகளில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது.
ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.96 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவை விட்டு வெளியேறிய அவரை லண்டன் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்து உள்ளனர்.
- வங்கி டெபாசிட்டுகள், நிலம் மற்றும் கட்டிடம் போன்றவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இந்த மெகா மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தியாவை விட்டு வெளியேறிய அவரை லண்டன் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்து உள்ளனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
நிரவ் மோடி மீதான விசாரணைகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், அவரது சொத்துகளை அமலாக்கத்துறை அடுத்தடுத்து முடக்கி வருகிறது. அந்தவகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள ரூ.2,596 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் சொத்துகளை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருந்தது.
மேலும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.692.90 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. மேலும் கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் அதன் கூட்டமைப்பு வங்கிகள் ரூ.1,052.42 கோடி மதிப்பிலான சொத்துகளை எடுத்துக்கொண்டன.
இந்த நிலையில் நிரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ.29.75 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி இருக்கிறது. நிதி மோசடி சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்து உள்ளது. இதில் வங்கி டெபாசிட்டுகள், நிலம் மற்றும் கட்டிடம் போன்றவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.
- அதிமுக அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்திலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு அதிமுக அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது தனியார் நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது.
- இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சென்னை:
ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். அவர் ஜெயலலிதாவின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.
மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் பெரும்பாலான சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ளார்.
அவர் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
தமிழகம் முழுவதும் இந்த அதிரடி சோதனைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது சசிகலா முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்தது. இதையடுத்து சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் வாங்கி குவித்த சொத்துக்களை முடக்கும் அதிரடி நடவடிக்கைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கினார்கள்.
பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை பல்வேறு கட்டங்களாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.
முதல்கட்டமாக சென்னை, கோவை, புதுவை உள்ளிட்ட இடங்களில் 9 சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினார்கள். 2-வது கட்டமாக போயஸ் கார்டன், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினார்கள்.
3-வது கட்டமாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகிய இடங்களில் உள்ள சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பினாமி சொத்துக்களை நோட்டீஸ் ஒட்டி முடக்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னையை அடுத்த பையனூரில் இருக்கும் 49 ஏக்கர் நிலத்தை முடக்கி வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.
இந்த நிறுவனம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பினாமி பெயரில் செயல்பட்டு வந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை தொடங்கினார்கள். அதன் படி இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து ரூ.15 கோடி மதிப்புள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் சொத்துக்களை முடக்கி உள்ளனர்.
பினாமி சட்டத்தின் படி இந்த நடவடிக்கையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். இதுவரை சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா இழந்துள்ளார்.
சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பிறகே வருமான வரித்துறை இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அவரது சொத்துக்களை முடக்கி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட், சுமார் ரூ.1,900 கோடி ஊழலில் ஈடுபட்டது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான சிங் என்பவர் தலைவராக இருந்த பிரபல அல்கெமிஸ்ட் குரூப் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் மீது நிதி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.239.29 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சிங் எம்.பி. விலகியதாக கூறப்பட்டாலும், அவரது எம்.பி. பதவி தொடர்பான விவரங்களில் அல்கெமிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் தொடர்வதாகவே கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக வசித்து வருகின்றனர். இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் நிரவ் மோடியின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது.
இவற்றை முடக்கி இருப்பதற்கான உரிய உத்தரவு நகலை விரைவில் ஹாங்காங் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. #PNBFraud #NiravModi
இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, லண்டன் அருகே உள்ள ஹெர்ட்போர்டுஷைர் என்ற இடத்தில் வசிக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த லண்டனில் உள்ள இங்கிலாந்து ஐகோர்ட்டு, அந்த நாட்டில் உள்ள மல்லையாவின் சொத்துகளை முடக்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க கோரி இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. #VijayMallya #Tamilnews






