search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PNB Fraud Case"

    வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு நாடு கடத்தத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PNBFraudCase #MehulChoksi
    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி சேட் கிரீனைச் சந்தித்துப் பேசினார்.



    அப்போது பிஎன்பி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியை நாடு கடத்த உதவுமாறு அவரிடம் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மெகுல் சோக்சியை நாடு நடத்தும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

    இந்தத் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார். இந்தியாவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா உடன்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் குறித்த காலவரையறை எதையும் கூறவில்லை என்றும் ரவீஸ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டிகுவா பிரதமர் எழுதிய கடிதத்தில், மெகுல் சோக்சியின் பாஸ்போர்ட் சட்டப்பூர்வமாக பெறப்பட்டது என்பதால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்தார். அவருக்கு எதிராக எந்த சட்டவிரோத புகார்களும் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வங்கி மோசடி வெளிப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, ஜனவரி மாதம் சோக்சி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். பின்னர் ஆண்டிகுவா பார்புடா குடியுரிமை பெற்றுள்ளார். #PNBFraudCase #MehulChoksi
    வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, ‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் மும்பை கோர்ட்டு பொது நோட்டீஸ் வெளியிட்டது. #PNBFraud #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் விசாரணை மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.



    இந்த நிலையில் இந்திய வங்கிகளில் இருந்து கோடிக் கணக்கில் கடன்பெற்று மோசடியில் ஈடுபடும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

    ‘தப்பி ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018’ எனப்படும் இந்த சட்டப்படி, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரை, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள்’ என அறிவித்து, அவர்களின் பினாமி சொத்துகள் உள்பட அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும்.

    தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பர்வி மோடி, சகோதரர் நீஷல் மோடி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் எதிராக மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஆஷ்மி தனித்தனியாக பொது நோட்டீஸ் வெளியிட்டு உள்ளார். இந்த பொது நோட்டீஸ்கள் முன்னணி நாளிதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

    இதில் பர்வி மற்றும் நீஷல் ஆகியோருக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீசில், ‘உங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டு இருந்த சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது?’ எனக்கேள்வி கேட்டு இருந்த கோர்ட்டு, இது தொடர்பாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதைப்போல நிரவ் மோடிக்கு எதிரான நோட்டீசில், ‘நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது மட்டுமின்றி, விசாரணைக்கும் ஆஜராக மறுத்து வருகிறீர் கள். எனவே மேற்படி சட்டத் தின் கீழ் நீங்கள் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என அழைக்கப்படுவீர்கள்’ என கூறப்பட்டு இருந்தது.

    அமலாக்கத்துறை கோரியிருந்தது போல உங்களை ஏன் தப்பி ஓடிய குற்றவாளி என அறிவிக்கக்கூடாது? என்றும், உங்கள் சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என்றும் செப்டம்பர் 25-ந் தேதிக்கு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.#PNBFraud #NiravModi  #Tamilnews
    ×