என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பா.ஜ.க. தான்- அண்ணாமலை
- தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
- சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
தொடர்ந்த, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ, தேர்தல் பரப்புரைக்கு வந்த தவெக-வுக்கோ சம்பந்தப்பட்ட வழக்கு என்று மூடி மறைக்க கூடாது. இது 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.
அதனால்தான் நாங்கள் நேரடியாக 41 உயிர்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் தான் ஒருநபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறினோம்.
சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.
பாஜகவின் 2 தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான்.
கரூர் விவகாரத்தில் தொடர்புடைய எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி எந்த அரசியல் பிரமுராக இருந்தாலும் சரி தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






