என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயநிதி"

    • பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ்நாடு உங்களுக்குக் கிடையாது.
    • தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்.

    விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையே, இன்றைய தென் மண்டலக் கழக இளைஞரணிச் செயலாளர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஓவர்டேக் செய்துவிட்டது.

    இந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கும்போது, இது நிர்வாகிகள் சந்திப்பா? அல்லது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடா? என உங்கள் எழுச்சியைக் காணும்போது நினைக்கத் தோன்றுகிறது.

    கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டம், இன்றைக்குத் தமிழ்நாட்டில் வெற்றுக்கூச்சல் போட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை; ஏன், அவர்களால் அவர்களுக்கே எந்தப் பயனும் இல்லை.

    இந்தியாவிலேயே ஒரு கட்சியின் இளைஞரணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளும், 50 லட்சம் உறுப்பினர்களும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க.தான். அரசியல் அறிவே இல்லமால் சில அட்டைகள் கத்தினாலும், உளறினாலும் களத்தில் வெற்றிப் பெறபோவது தி.மு.க. தான்.

    பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ்நாடு உங்களுக்குக் கிடையாது. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்.

    இபிஎஸ் அவர்களே தலையை நிமிர்த்தி வழியை பார்த்து நடந்தால்தான் நேராக நடக்க முடியும். நீங்கள் மோடியின் காலையும், அமித்ஷாவின் காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால் உங்களை போல் முட்டுச் சந்தில்தான் போய் நிற்க முடியும்!"

    முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருப்பீங்க.. முரட்டு அடிமைகள் தெரியுமா? எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை" என்று தெரிவித்தார்.

    • உதயநிதியை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் சந்தித்து பேசினர்.
    • இது தொடர்பான புகைப்படங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னாள் கிரிக்கெட் விரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    இது தொடர்பான புகைப்படங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், விளையாட்டு மேம்பாடு, தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தினோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
    • குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

    இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

    இந்த கொண்டாட்டத்தில் அவரது மனைவி துர்கா, துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா மற்றும் பேரன் இன்பநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பொங்கல் கொண்டாட்டத்தின் போது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    • முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும்
    • திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும்.

    சிவகாசி மேயர் சங்கீதா இன்ப இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது பேசிய அவர், "காதல் பண்ணறது EASYனு எல்லாரும் சொல்லுவாங்க ஆனா... இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமானது இந்த காதல் கல்யாணம்தான். முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும். அவங்களைச் சம்மதிக்க வைக்கணும். அடுத்து தன்னோட காதல் எவ்ளோ உண்மையானதுன்னு நிரூபிக்கணும். திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னு சொந்தக்காரங்க வேற வருவாங்க... அவங்களைச் சமாளிக்கணும். காதல் கல்யாணத்துக்கு இதுமாதிரி பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்" என்று கலகலப்பாக பேசினார்.

    • கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவின் வெற்றியால் அப்பகுதி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.

    கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

    மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி.
    • மாரடைப்பு காரணமாக பொன்னுசாமி உயிரிழந்தார்.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

    மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. முன்னதாக 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.

    பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று - பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த திரு. கு.பொன்னுசாமி MLA அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை உணர்வோடு மக்களுக்குத் தொண்டாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!" என்று தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் பொன்னுசாமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் அல்லது மூத்த அமைச்சர்கள் கூட நேரில் அஞ்சலி செலுத்த செலுத்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது

    பொன்னுசாமி பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், பொன்னுசாமி உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

    • 2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம்
    • அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்.

    துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர்- தியாகராய நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வட்ட, பாக திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.

    கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், அதற்கு இளைஞர் அணி ஆற்றிவரும் பணிகளை எடுத்துக்கூறியும் உரையாற்றினோம்.

    2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!" என்று தெரிவித்துள்ளார்.

    'அரசியல் புரிதல் இல்லாமல் கூச்சல் எழுப்பும் கூட்டம்' என்று த.வெ.க. தொண்டர்களை தான் திமுகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் விஜயை உதயநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

    • உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி.
    • இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    'இட்லி கடை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது.

    இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது.

    தனுஷின் 'இட்லி கடை' படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகஸ்தராக அவர் களமிறங்கவுள்ளதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் உறுதிசெய்தது. மேலும், இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், இன்பநிதிக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல், திமுகவினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.

    எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
    • குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.

    குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்!" என்று பதிவிட்டுள்ளார். 

    • ரஜினியை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் பக்கம் திரும்பிய மணிரத்னம்.
    • மூன்று நிறுவனங்கள் தயாரிக்கும் கமல்ஹாசனின் 234ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இதையடுத்து அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக ஆவலுடன் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது.

    இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வீடியோ ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

    கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த வெளியான நாயகன் திரைப்படம் இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் அந்த படத்திற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    வாழை

    வாழை

    இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×