search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசி மேல சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா
    X

    தென்காசி மேல சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா

    தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
    தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொடியேற்று விழா நேற்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    ஆடித்தபசு திருவிழா வினை முன்னிட்டு திருவிழா நாட்களில் தினமும் காலை , மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்கு தென்காசி தெற்கு மாசி வீதியில் நடைபெறும். இந்த தபசுக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்காசிக்கு வருகை தருவார்கள்.

    இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி நடைபெறும். பின்னர் 3 முறை சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.

    இந்த விழாவில் 28 -ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×