என் மலர்
அமெரிக்கா
- இந்தியா-பாகிஸ்தான்போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.
- பாகிஸ்தானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து 2 நாடுகளுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால் இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.மேலும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் போருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கே ரூபியோ தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இரு நாடுகளில் நிலைமையை நாள்தோறும் கண்காணித்து வருகிறோம்.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே என்ன நடக்கிறது? கம்போடியாவிற்கும், தாய்லாந்திற்கும் இடையே என்ன நடக்கிறது? என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளோம். போர் நடந்து கொண்டிருக்கும் போது பேச்சு வார்த்தை நடத்துவது கடினம்.
போர் நிறுத்தத்திற்கு ஒரே வழி இரு தரப்பிலும் ஒருவருக்கொருவர் துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொள்வது தான். ரஷியா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை தற்காலிமாக நிறுத்துவது மட்டுமல்லாது தற்போதைய மற்றும் எதிர்கால மோதல்களை தடுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படுவது நோக்கமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்- குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடி, இத்தாலியின் லாரன்சோ முசெட்டி-லாரன்சோ சொனேகோ ஜோடியுடன் மோதியது.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட ராஜீவ் ராம் ஜோடி 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பவுலினி முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக ரஷிய வீராங்கனை 2வது செட்டை 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 6-3 என கைப்பற்றிய ஜாஸ்மின் பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.
- இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதித்தார்.
அதன்பின் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியது.
இதில் இந்தியா-அமெரிக்கா பிரதிநிதிகள் குழுக்கள் இடையே 5 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் வரியை விதித்தார்.
இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக இருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை வேறு தேதியில் நடத்த திட்டமிடப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியிடப்படவில்லை.
புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.
- மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
லவுஞ்சில் நடந்த ஒரு சிறிய சண்டை துப்பாக்கிச் சூடாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.
இறந்தவர்களில் மூவரும் ஆண்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. காயமடைந்தவர்களில் எட்டு பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
- அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
பின்னர் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், "ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது" என்று கூறினார்.
இதனிடையே அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது புதினிடம் டிரம்ப் தனது மனைவி மெலனியா எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் உக்ரைனில் போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அக்கடிதத்தில், "புவியியல், அரசாங்கம் மற்றும் சித்தாந்தத்திற்கு மேலே நிற்கும் ஒரு அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும். இந்த குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாதுகாப்பதில், நீங்கள் ரஷியாவிற்கு மட்டும் சேவை செய்வதை விட அதிகமாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த குழந்தைகளுக்கு நீங்கள் பேனாவால் கையெழுத்திடுவது மூலம் உதவ முடியும்" என்று மெலனியா தெரிவித்தார் .
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இத்தாலியின் ஜானிக் சின்னர் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
- வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறை ஆகும்.
- இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளியினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நகரின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.
இந்நிலையில், சியாட்டில் நகரை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்த இந்திய-அமெரிக்க வம்சாவளியினரை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, சியாட்டில் நகரின் ஸ்பேஸ் நீடில் என்ற கோபுரத்தின் உச்சியில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
605 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்படுவது வரலாற்று தருணம் ஆகும். வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறையாகும். இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் 2-6 என முதல் செட்டை இழந்த பவுலினி, அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
நேற்று நடந்த போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டிகளில் ரிபாகினா, இகா ஸ்வியாடெக் உடனும், ஜாஸ்மின் பவுலினி ரஷியாவின் குடர்மெடொவா உடனும் மோதுகின்றனர்.
- டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இதே ஜூன் B2 Bomber விமானங்களை வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவாரத்தை நடத்த நேற்று ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் புதின் தரையிறங்கும் போது ஒரு B2 Bomber குண்டுவீச்சு விமானம் அவர் மீது பறந்தது.
அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷியாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
டிரம்ப் புதினை வரவேற்றபோது, குண்டுவீச்சு விமானங்கள் மேலே பறக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் அணுசக்தி தளங்கள் மீது இதே ஜூன் B2 Bomber விமானங்களில் பங்கர் பஸ்டர் குண்டுகளை நிரப்பி அதை வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது. B2 Bomber பெரிதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்டவை.
அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருப்பதிலேயே B2B குண்டுவீச்சு விமானங்கள் மிகவும் விலையுயர்ந்த விமானங்கள் ஆகும்.
ஒவ்வொன்றும் 2.1 பில்லியன் டாலர்கள் மதிப்புடையவை. இதில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 6,000 கடல் மைல்கள் வரை பறக்க முடியும். B2 Bomber குண்டுவீச்சு விமானங்கள் 18,144 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டவை. அணு குண்டுகளையும் அவற்றால் சுமந்து செல்ல முடியும்.

B2 Bomber






