சைரன் ஒலி போன்று மிமிக்ரி செய்த பறவைகள்

சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது. பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சைரன் ஒலி போன்று மிமிக்ரி செய்த பறவைகள்
Published on

மனிதர்கள் மிமிக்ரி செய்வது போல பறவைகளும் சைரன் ஒலி சத்தம் எழுப்பிய வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் கார்கள் பழுதடைந்தது போன்று சப்தம் கேட்டது. உடனே போலீசார் அங்கு சென்ற போது சாலையில் எந்த வாகனங்களும் இல்லை. சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது. அப்போது போலீசார் சுற்றிலும் பார்த்த போது அங்குள்ள மரத்தில் பறவைகள் சைரன் ஒலி சத்தம் எழுப்பியது தெரிய வந்தது.

ஸ்டார்லிங் என்று அடையாளம் காணப்பட்ட பறவைகள் எந்திரங்களின் ஒலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற விஷயங்களை பின்பற்றுவது இதன் சிறப்பாக உள்ளது. இந்த ஒலி சத்தத்தால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com