என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் - பலாஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்துள்ளது
    • போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது . இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

     

    பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது, ஹமாஸ் - இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பிடித்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பிடம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது.

    காசாவில் 36,000 மக்களை கொன்று குவித்த பிறகு, தற்போது ரஃபாவில் உள்ள அகதி முகாம்கள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாக இல்லை.

     

    இந்நிலையில் பாலஸ்தீனிய சுதந்திர அரசும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பும் ஐ.நாவின் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும் தாயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்த இந்த இரக்கமற்ற போரை முடிவுக்கு கொண்டுவருமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இதற்கிடையில் காசா தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 

    • தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன்.
    • நடப்பு விவகாரங்களில் நான் இனி கவனம் செலுத்துவேன்" என்று தெரிவித்தார்.

    பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்தவர் அலெக்சாண்டர் டி குரூ. 48 வயதான இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அவர் கூறும் போது, "தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு. எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன்.

    இன்று முதல் நான் எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நடப்பு விவகாரங்களில் நான் இனி கவனம் செலுத்துவேன்" என்று தெரிவித்தார். அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.
    • 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    காசா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த சண்டையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தாலும் இஸ்ரேல் அதனை கண்டு கொள்ளவில்லை.

    ஹமாசை அழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நுசிரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதியில் சுரங்க பாதையில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை அடைத்து வைத்துள்ளதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சரமாரியாக குண்டுகள் வீசியதிலும், துப்பாக்கியால் சுட்டத்திலும் 274 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இதில் 64 குழந்தைகள், 57 பெண்கள், 37 முதியவர்களும் அடங்குவர். இந்த தாக்குதலின் போது 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும், இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்து வரும் பென்னி காண்ட்சுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் பென்னி காண்ட்ஸ் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுக்கிறார். அதனால் நான் இன்று கனத்த இதயத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,

    இஸ்ரேல் மந்திரி பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அவரை பதவியை விட்டு விலக வேண்டாம். போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல. படைகள் சேர வேண்டிய நேரம் இது என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மந்திரி பதவி விலகிய விவகாரம் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது .

    இதனால் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.

    • மெக்சிகோவிற்கும் ஹவாய் தீவிற்கும் இடைப்ப பசிபிக் கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் அறிந்திராத இந்த வினோத உயிரினம் வாழ்கிறது.
    • கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன.

     உலகில் முதல் உயிர் என்பது முதலில் கடலில் தோன்றியதாக கருதப்படுகிறது. பூமியின் 71 சதவீத இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நீர் பலட்சக் கணக்கான வித்தியாச வித்தியாசமான உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. ஆழ்கடலுக்குள் ஒளிந்திருக்கும் எண்ணிலடங்கா அதிசயங்கள் நம்மை வகையில் அவ்வபோது கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.

    புதிதாக கண்டுபிடிக்கப்படும் விநோதமான உயிரினங்கள் மனிதன் இயற்கையை குறித்து அறிந்தது சொற்பமே என்று புலப்படுத்துகிறது. தற்போது பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளது அறிவியல் உலகில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

     

    மெக்சிகோவிற்கும் ஹவாய் தீவிற்கும் இடைப்ப பசிபிக் கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் பார்த்திராத இந்த வினோத உயிரினம் வாழ்கிறது. கடலின் 11,480 முதல் 18,045 அடியாழத்தில் அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

     

    இந்த உயிரினமானது கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதற்கு 'Unicumber' என்று பெயர் சூட்டபட்டுள்ளது . இந்த உயிரினம் மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்டுள்ளது. கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன. அதாவது இவை கடலின் வேக்கும் கிளீனர் போல் செயல்படுகின்றன. இதுமட்டுமின்றி கடல் பன்றி என்று குறிப்பிடப்படும் ஒரு உயிரினமும் அப்பகுதியில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

     

    இவற்றைக் குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள், பசிபிக் கடல் பிரதேசத்தின் அடியாழத்தில் வாழும் 10 இல் 9 உயிரினங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளன என்று தெரிவிக்கின்றனர். 

     

    • ஒரு பயனர், சிகாகோவிலும் ஒரு இந்திய உணவகத்தில் முதல் முறையாக பானிபூரியை ருசித்தேன்.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வட இந்தியாவில் மிகவும் பிரபலமான, தெருவோர கடைகளில் தயாரிக்கப்படும் பானிபூரி தற்போது நாடு முழுவதும் தெருவோர கடைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவிலும் பானிபூரி பிரபலமாகி வருகிறது. அங்குள்ள மினியாபோலிஸ் பகுதியில் ஒரு இந்திய உணவகத்தில் இந்த சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை அங்குள்ள இளைஞர்களும், உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 90 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்த இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், சிகாகோவிலும் ஒரு இந்திய உணவகத்தில் முதல் முறையாக பானிபூரியை ருசித்தேன். அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என பதிவிட்டிருந்தார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • 300-க்கும் அதிக ராட்சத பலூன்களை வட கொரியா அனுப்பியுள்ளது.
    • தேவையற்ற பிரச்சினைகள் எழலாம் என்று தெரிவித்தார்.

    வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தென் கொரிய எல்லைக்குள் குப்பைகளால் நிரம்பிய 300-க்கும் அதிக ராட்சத பலூன்களை வட கொரியா அனுப்பியுள்ளது.

    முன்னதாக கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் எல்லை பகுதியில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒலிப்பெருக்கி பிரசாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகள் எழலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மிக அபாயகரமான சூழலுக்கு இது வழிவகுத்துவிடும்," என்று அவர் தெரிவித்திருந்தார். சமீபத்திய பலூன்களில் குப்பை காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இடம்பெற்று இருந்தது.

    வட கொரியாவின் பலூன்கள் அனுப்பும் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென் கொரியா சார்பில் ஒலிப்பெருக்கி பிரசாரம் துங்கப்பட்டது. இதில் ஒலிப்பெருக்கிகள் மூலம் கிம் ஜாங் உன் எதிர்ப்பு பிரசாரம் மற்றும் பிரபலமான தென் கொரிய பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. 

    • பயணிகள் எல்லோரும் அந்த பூனையை வேடிக்கையாகவும், செல்லமாகவும் கவனித்தனர் என பதிவிட்டிருந்தார்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பறக்கும் விமானத்திற்குள் பூனை ஒன்று சுற்றித்திரிந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து டென்னிசியின் நாஷ்வில்லி பகுதிக்கு இயக்கப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ஜேசன் பிட்ஸ் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில் ஒரு பூனை விமானத்திற்குள் சுற்றி திரிகிறது. வீடியோவுடன் அவரது பதிவில், சில நாட்களுக்கு முன்பு ஸ்பிரிட் ஏர்லைன்சில் ஒரு பூனை சுற்றித்திரிவதை கண்டேன். விமான பணிப்பெண்கள் அதனை கவனிக்கவில்லை. விமானத்தில் இருந்த ஒருவரின் பையில் இருந்து அது வெளியேறியது. பயணிகள் எல்லோரும் அந்த பூனையை வேடிக்கையாகவும், செல்லமாகவும் கவனித்தனர் என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • யுவராஜூக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது
    • இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

    கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    நேற்று முன் தினம் [ஜூன் 8] 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

     

    ஏற்கனவே இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனி நாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என்று கனடா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார்,
    • சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.

    உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்த நாள். ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.

    பிறப்பு மற்றும் கல்வி

    சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார்.

    வாழ்க்கை

    மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார், ஒன்று சென்னை மற்றொன்று அமெரிக்காவில் லாஸ் ஆல்டோஸ்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
    • இந்த விமானத்தை யார் இயக்கினார் என்ற தகவல் இல்லை.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த போட்டியில் தாமதம் மற்றும் இடையூறு ஏற்பட்ட நிலையில், போட்டியின் போது நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோவின்படி, சிறிய ரக விமானம் ஒன்றில் "இம்ரான் கானை விடுதலை செய்" என்ற வாசகம் அடங்கிய கொடி கட்டப்பட்டு இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. போட்டியின் போது இந்த விமானத்தை யார் இயக்கினார்கள், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள நசௌ கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் நடத்துகின்றன.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

    நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது.
    • வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கோ, ஆபரேசனின்போது ரத்தம் தேவைப்படுபவர்களுக்கோ ரத்த தானம் வழங்குவது இயல்பு. மருத்துவ வளர்ச்சியையும் தாண்டி இந்த ரத்த தானம் ஒரு மனிதாபிமான உதவியாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உயிரியலாளர் ஒருவர் கொசுக்களுக்கு தன் மன விருப்பத்தின்படி ரத்ததானம் அளிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல உயிரியலாளர் பெரன் ரோஸ். கொசுக்களை குறித்தும் அதனின் இனப்பெருக்கம், ஆயுட்காலம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இதற்காக ஆய்வகம் ஒன்றை அமைத்து கொசுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார். இதனால் அவரை 'கொசு மனிதன்' எனவும் செல்லமாக அழைக்கிறார்கள். இந்தநிலையில் கொசுக்களின் உணவுக்காக அவர் தன் கையையே நீட்டி ரத்தத்தை தானமாக கொடுக்கிறார்.

    அவரின் கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.


    • டெல்லி ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • இதில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார்.

    வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    இதற்கிடையே, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பில் கேட்ஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    ×