என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும் இந்த வார்த்தை இயற்கையை மீறிய மயக்கம் என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது.
    • இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை போப் பயன்படுத்தி அது சர்ச்சையாகி அதற்கு கடந்த மாதம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்த கடுமையான  வசைமொழியை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வாட்டிகன் திருச்சபையில் கடந்த மே 20 ஆம் தேதி பிஷப்களுடன் நடந்த சந்திப்பின்போது ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழியான புரோசியாஜினே [Frociaggine] என்ற வார்த்தையை போப் பிரான்சிஸ் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும் இந்த வார்த்தை இயற்கையை மீறிய மயக்கம் என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது. பிஷப்களிடம் போப் உரையாடும்போது, வாட்டிகனில் Frociaggine காற்று வீசி வருகிறது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

     

    ஓரினச்சேர்க்கையாளர்களை செமினரியங்களாக அனுமதிக்கலாமா என்ற விவாதத்தின்போது போப் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இத்தாலிய ஊடகங்களில் இந்த விவகாரம் பேசுபொருள்ளாகியுள்ளது . இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை போப் பயன்படுத்தி அது சர்ச்சையாகி அதற்கு கடந்த மாதம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில்தான் மீண்டும் அவர் இந்த வசைமொழியை பயன்படுத்தியுள்ளார்.

    87 வயதாகும் பிரான்சிஸ் கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாக உள்ள நிலையில் LGBT சமூகத்துக்கு எதிரான பார்வையை கொண்டுள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறார். இதற்கிடையில் பிறப்பால் அர்ஜென்டைன் நாட்டவரான போப் பிரான்சிஸ், இத்தாலிய வசைமொழியின் உள்ளர்த்தம் தெரியாது பேசியுள்ளார் என்றும் கூறப்படுவது ஒப்புநோக்கத்தக்கது.  

    • குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
    • போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.

    போதை பழக்கத்துக்கு அடிமையான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் பதவியில் உள்ள அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த போது, மகனுக்கு எதிரான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரை மன்னிக்க மாட்டேன் என்று அதிபர் பைடன் தெரிவித்து இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.

    இது தொடர்பாக அவர் காவல் துறையில் வாக்குமூலம் அளித்ததை அடுத்து ஹண்டர் பைடன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில், தற்போது ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன், "நான் அதிபர், மற்றும் ஒரு தந்தை. தங்களது செல்ல பிள்ளைகள் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி அதில் இருந்து அவர்கள் விடுப்பட்டு, மீண்டு வருவதை பார்த்து பெருமை கொள்ளும் உணர்வை பல்வேறு குடும்பத்தினர் புரிந்து கொள்வர்."

    "இந்த வழக்கின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொண்டு, நீதிமன்ற வழிமுறைகளுக்கு தொடர்ந்து மரியாதை அளிப்பேன். இந்த தீர்ப்பை எதிர்த்து ஹண்டர் பைடன் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்," என்றார்.

    • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
    • மோசமான வானிலையால் ஏற்பட்ட திடீர் குலுக்கலில் ஒருவர் உயிரிழந்தார்.

    லண்டன்:

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்தது.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

    இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விமான குலுக்கலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    சிறிய காயங்கள் உள்ள பயணிகளுக்கு 10,000 டாலர் வழங்கப்படும். கடுமையான காயங்கள் உள்ளவர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி விவாதிக்கலாம். கடும் காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்ட பயணிகளுக்கு நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் நிதி உதவி கோரும் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய 25,000 டாலர் முன்பணமாக வழங்கப்படும். பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளது.

    • மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மாயமான விமானம் மலைப்பகுதிகளில் மோதி நொறுங்கியதாக தகவல் வெளியானது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மலாவி துணை அதிபர் சௌலோஸ் மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து காலை 9.17 மணிக்கு புறப்பட்டது.

    லிலோங்கில் புறப்பட்ட ராணுவ விமானம் சூசு விமான நிலையத்தில் காலை 10.02 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். எனினும், மோசமான வானிலை காரணமாக விமானம் தலைநகருக்கே திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் ரேடாரில் இருந்து மாயமாகி இருக்கிறது. மாயமான விமானம் மலைப்பகுதிகளில் மோதி நொறுங்கியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மலாவியின் துணை அதிபர் மற்றும் அவருடன் பயணம் செய்த 9 பெரும் விமான விபத்தில் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

    • ஜூன் 6 அன்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார்.
    • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார்.

    போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி ஜூன் 5 அன்று புறப்பட்டுச் சென்றது.

    25 மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜூன் 6 அன்று அவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.

    இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார். மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார். மீன் குழம்புடன், ஒரு விநாயகர் சிலையையும் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

    இந்நிலையில், அந்த சர்வேதேச விண்வெளி நிலையத்தில் சூப்பர்பக்' என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா விண்வெளி வீரர்களது சுவாச மண்டலத்தை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

    இவை வேற்று கிரக பாக்டீரியாக்கள் அல்ல. பூமியில் உள்ள பாக்டீரியாதான். ஆனால் பூமியிலிருந்து பயணித்த இந்த பாக்டீரியாக் விண்வெளியில் மூடிய சூழலில் மிகவும் ஆபத்தானவை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.
    • 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்

    இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர் தனது 100-வது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீன்ஸ்வெர்லினை கரம் பிடித்துள்ளார்.

    பிரான்ஸ்சில் நார்மாண்டி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர், ஹரால்டு டெரன்ஸ்-ஜீன்ஸ்வெர்லின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சில பயனர்கள், இந்த வயதில் இது தேவையா? என பதிவிட்டனர்.

    அதற்கு ஜீன் பதில் அளிக்கையில் காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கும் அந்த உணர்வு உண்டு என்றார். இந்நிலையில் ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார். 

    • எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன்.
    • ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

    அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

     

    இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி  தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கைலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

    பல்மோனரி பிலெப் எனப்படும் இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க ஐந்தரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினர். இதனால் கைலா உயிர்பிழைத்தார்.

     இதுகுறித்து கைலாவின் தந்தை கூறுகையில், 'எனது மகள் படும் வேதனையை பார்த்து நான் ஒரு குழந்தையைப் போல் அழுதேன். அவளுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. அவள் இறக்கப்போகிறாள் என்றே பயந்தேன், தயவு செய்து இளஞர்கள் புகைப்பழக்கத்தை கை விடுங்கள், அதனால் ஒரு பயனும் இல்லை, Its not worth it' என்று தெரிவித்தார்.

     

    சிகிச்சைக்ககுப் பிறகு உடல் தேறி வரும் கைலா பேசுகையில், 'எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன். ஆனால் இப்போது நன் அனுபவித்த வலிக்கு பிறகு நீ ஒருபோதும் சிகரெட்டை தொடப்போவதில்லை' என கூறினார். 

     

    சிகெரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிகெரெட் புகையை உள்ளிழுக்கும்போது நுரையீரலுக்குள் நச்சுத்தன்மை கொண்ட கேமிக்கல்களும்,  யுரேனியமும் படிமங்களாக சேகரமாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • சில்தெனாபில் (Sildenafil) என்ற மருத்துவப் பெயருடைய இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரான வாயாகராவே மருந்தின் பெயராக வெகுஜனத்தின் மத்தியில் அறியப்படுகிறது.
    • வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்தான வாயாகரா குறித்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சில்தெனாபில் (Sildenafil) என்ற மருத்துவப் பெயருடைய இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரான வாயாகராவே மருந்தின் பெயராக வெகுஜனத்தின் மத்தியில் அறியப்படுகிறது.

    வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

     

     

    இந்த ஆய்வு முடிவுகள் நியாபக மறதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வயாகரா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நியாபக மறதி மருத்துவத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

     நியாபக மறதி மொத்தம் இரண்டு வகைப்படும். ஒன்று, மூளையில் படியும் Amyloid பீட்டா படிமங்கள் நியூரான்களின் தொடர்பை துண்டிப்பதால் ஏற்படும் அல்சைமர் நியாபக மறதி, மற்றோன்று முன்கூறிய வாஸ்குலார் நியாபக மறதி. இந்தியாவில் அல்சைமர் நியாபக மறதியை விட வாஸ்குலார் நியாபக மறதியே அதிகம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • இது ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல்.

    ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை தனது இயங்குதளங்கள் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகத்திற்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


    இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


    ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்டி நடைபெற்ற போது அதில் பங்கேற்ற ஒரு காளை வேலியை தாண்டி குதித்து திடீரென பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அமெரிக்காவில் ஓரிக்கான் ரோடியோ பகுதியில் காளை சவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சம்பவத்தன்று இந்த நிகழ்ச்சியின் இறுதி பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இதனை காண ஏராளமான பார்வையாளர்கள், கால்நடை ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் குவிந்திருந்தனர்.

    போட்டி நடைபெற்ற போது அதில் பங்கேற்ற ஒரு காளை வேலியை தாண்டி குதித்து திடீரென பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதைக்கண்ட பார்வையாளர்கள் அங்குமிங்குமாக ஓடினர். அப்போது அந்த காளை ஒரு பெண்ணை முட்டி தூக்கி வீசியது. மேலும் சில பார்வையாளர்களை காளை துரத்தியதில் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அந்த காளையை மடக்கி பிடித்து அழைத்து சென்றனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • மோசமான வானிலை காரணமாக விமானம் திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது.
    • மாயமான விமானத்தை தேட அண்டை நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. துணை அதிபர் சௌலோஸ் மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து காலை 9.17 மணிக்கு புறப்பட்டது.

    லிலோங்கில் புறப்பட்ட ராணுவ விமானம் சூசு விமான நிலையத்தில் காலை 10.02 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். எனினும், மோசமான வானிலை காரணமாக விமானம் தலைநகருக்கே திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் ரேடாரில் இருந்து மாயமாகி இருக்கிறது.

    மாயமான விமானத்தை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாயமான விமானத்தை தேடுவதற்கு அண்டை நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், நார்வே மற்றும் இஸ்ரேல் உள்ளிட்டவைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

    மாயமான விமானம் கிடைக்கும் வரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மலாவி அதிபர் லசாரஸ் சக்வெரா தெரிவித்தார். 

    • அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

    ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.

     

     இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

     

    ×