என் மலர்tooltip icon

    உலகம்

    • பாகிஸ்தானுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான்.
    • போராட்டக்காரர்கள் AK-47 துப்பாக்கிகளால் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. இந்த ரத்து தற்போது வரை நீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

    பாகிஸ்தானுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான். தற்போது இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்தால் அங்கும் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சிந்து மாகாணத்தில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டிற்கு AK-47 துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சரின் வீட்டிற்கு தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் ஒருவர் நெடுஞ்சாலையை மறித்ததால் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து மாகாணத்திலிருந்து பாகிஸ்தானின் பஞ்சாபிற்கு சிந்து நதியை திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கால்வாய் திட்டத்தை உள்ளூர்வாசிகள் எதிர்த்து வந்தனர். அமைச்சரின் வீட்டிற்கு வெளியே போராட்டக்காரர்கள் AK-47 துப்பாக்கிகளால் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. 

    • பாகிஸ்தானின் அடாவடிக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
    • இந்த குழுவினர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தியது. ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்கியது.

    பாகிஸ்தானின் இந்த அடாவடிக்கும் இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டது.

    இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் ஆதரவு செயல்பாடுகளை உலக அரங்கில் அம்பலப்படுத்தி ராஜிய ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    இதற்காக அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டது.

    இந்த குழுவில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ்லால், பிரதான் பருணா, ஹேமங் ஜோஷி, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான சர்மான் குர்ஷித், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. ஜான் பிரிட்டாஸ், முன்னாள் தூதர் மோகன் குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

    ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று காலையில் ஜப்பான் புறப்பட்டு சென்றது.

    இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றி எடுத்துரைப்பதற்காக புறப்பட்டு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு ஜப்பான் சென்றடைந்தது.

    இந்த குழுவினர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    ஜப்பானில் பல்வேறு அரசு நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்துவார்கள்.

    பாராளுமன்ற சிறப்பு குழு ஜப்பானை தொடர்ந்து கொரியா, சிங்கப்பூர், மலேசியாவிற்கு சென்று விளக்கம் அளிக்க உள்ளனர்.

    • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.
    • இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கியது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு போட்டியாக, தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கி உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ.) விதிகளின் படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அந்த தடையை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

    • பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போது இந்தியாவுடன் நின்ற தாலிபான் அரசாங்கத்தை சீனா இப்போது கவர முயற்சிக்கிறது.

    அதன்படி இன்று (புதன்கிழமை) சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஒரு பெரிய முடிவை எடுத்தன.

    சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

    பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்தியா CPEC-ஐ பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளது. ஏனென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியையும் இந்தியா எதிர்க்கிறது. தற்போது இந்த திட்டத்தில் CPEC இன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

    முத்தரப்பு சந்திப்பில், சீன வெளியுறவு அமைச்சகம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாக்க சீனா ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.

    • Video voyeurism-க்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி பேசினார்.
    • பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக நான்சி மேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சியை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நான்சி மேஸ், அவையில் செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    நான்சி மேஸ் அவர் தனது நிர்வாணப் படத்தை  அவையில் காட்டினார். அந்தப் புகைப்படத்தைக் காட்டி, தனக்கு வருங்காலக் கணவராக வர இருந்தவர் தனது அனுமதியின்றி ரகசியமாக தன் புகைப்படங்களை எடுத்ததாகக் நான்சி கூறினார்.

    இந்த சம்பவம் நேற்று ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் அமர்வின் போது நடந்தது. அவைக் கூட்டத்தில் நான்சி மேஸ் Video voyeurism-க்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி பேசும்போது கருப்பு வெள்ளையாக பதிவான தனது நிர்வாண புகைப்படத்தை எடுத்துக் காட்டினார். அந்த படம் தனது அனுமதி இன்றி வீட்டில் வைத்து தனக்கு கணவராக வர இருந்த பேட்ரிக் பிரையன்ட் எடுத்தது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "சுதந்திரம் என்பது ஒரு கோட்பாடு அல்ல. நீங்கள் தூங்கும்போது உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் படத்தை எடுக்க முடிந்தால் பின் அது சுதந்திரம் கிடையாது. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, ஒரு பாதிக்கப்பட்டவராகவும் பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

    Video voyeurism என்பது ஒரு தனிநபரின் அனுமதியின்றி தனிப்பட்ட பகுதியில் அவரைப் பதிவு செய்யும் செயலாகும்.

    தனது முன்னாள் வருங்கால கணவர் பேட்ரிக் பிரையன்ட் தன்னை ரகசியமாக படம் பிடித்தது மட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக நான்சி மேஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

    • உக்ரைன் திடீரென ரஷியா நாட்டிற்குள் நுழைந்து பல பகுதிகளை பிடித்தது.
    • உக்ரைன் படைகளை விரட்ட ரஷியா கடுமையாக சண்டையிட்டது.

    ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது படையெடுத்தது. இரு நாட்டின் எல்லைகளில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான இடங்களை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் (பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்) உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது. சில இடங்களில் ரஷியா பின்வாங்கியது.

    பின்னர் தரைவழி தாக்குதலை குறைத்துக் கொண்ட ரஷியா, உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நுழைந்தது. அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    2ஆவது உலகப் போருக்குப்பின் ரஷியா நிலப்பரப்பில் அடுத்த நாட்டின் ராணுவம் நுழைவது இதுவே முதல்முறையாகும். இதனால் உக்ரைன் படைகளை விரட்டியடிக்க ரஷியா ராணுவம் கடுமையாக சண்டையிட்டது.

    கடந்த 26ஆம் தேதி, குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படைகள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டது என ரஷிய ராணுவம் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இதை மறுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் குர்ஸ்க் பிராந்தியம் சென்றதாக, ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    குர்ஸ்க் அணுஆயுத நிலையம்-2 கட்டப்பட்டு வருகிறது. இதை புதின் பார்வையிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட தன்னார்வலர்களுடன் ரகசியமாக பூட்டிய அறையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அத்துடன் பொறுப்பு கவனர் அலேக்சாண்டர் கின்ஸ்டெய்ன் உடனும் பேசியுள்ளார்.

    உக்ரைன் ஆக்கிரமிப்பால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யப்படும் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    நேற்றிரவு முழுவதும் 159 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன ராணுவத்தை பின்வாங்க செய்ய, ரஷியாவுக்கு ஆதரவாக 12 ஆயிரம் வீரர்களை வடகொரியா அனுப்பியதாக உக்ரைன், அமெரிக்கா மற்றும் தென்கொரிய குற்றம்சாடடியது. பின்னர் வீரர்கள் அனுப்பப்பட்டதாக வடகொரியா ஒப்புக்கொண்டது.

    • பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, தீபக் கண்டேல் என்ற மற்றொரு இந்தியர் திடீரென அவரை கத்தியால் தாக்கினார்
    • எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ இல்லை என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவுபடுத்தின.

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மற்றொரு இந்தியரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இறந்தவர் அக்ஷய் குப்தா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சுகாதார தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் அக்ஷய் குப்தா, மே 14 ஆம் தேதி ஆஸ்டினில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, தீபக் கண்டேல் என்ற மற்றொரு இந்தியர் திடீரென அவரை கத்தியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த அக்ஷய் குப்தா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அக்ஷய் குப்தாவிற்கும் குற்றம் சாட்டப்பட்ட தீபக் கண்டேலுக்கும் இடையே எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ இல்லை என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவுபடுத்தின. காட்சிகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கண்டேல் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போலீஸ் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட தீபக் கண்டேல் கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. போலீசாரின் விசாரணையில், அக்ஷய் குப்தா தனது மாமாவைப் போலவே இருப்பதாகவும், அதனால்தான் அவரைக் குத்திக் கொன்றதாகவும் கண்டேல் தெரிவித்தார்.  

    • இந்த கோல்டன் டோம் திட்டம் இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை இன்ஸபிரேஷனாக கொண்டுள்ளது
    • நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க முடியும்.

    நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான "கோல்டன் டோம்" என்ற திட்டத்தை நேற்று அறிவித்தார்.

    இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும் என்றும், 2029 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவிக்காலம் முடியும்போது அவை முழுமையாக செயல்படும் என்றும் கூறினார்.

    இந்த கோல்டன் டோம் திட்டம் இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை இன்ஸபிரேஷனாக கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குவதை எதிர்த்து ஈரான், ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர் தாக்குதல்கள் நடக்கின்றன. அங்கிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்புகள் கொண்ட அமைப்பு "அயன் டோம்" என்று குறிப்பிடப்படுகின்றன. 

    • மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்.

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் அமீர் ஹம்சா(வயது 66). அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இந்த நிலையில் லாகூரில் வசித்து வந்த அமீர் ஹம்சா வீட்டில் இருந்தபோது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரது உடம்பில் காயங்கள் இருந்தன. அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    படுகாயம் அடைந்த அவரை மீட்டு லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைபுல்லா காலித் 3 நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது.

    அமீர் ஹம்சா, இந்தியாவில் நடந்த தாக்குதல் பின்னணியில் இருந்துள்ளார். இவரும் சைபுல்லாவும் 2005-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டனர்.

    அமீர் ஹம்சா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் மற்றும் அப்துல் ரகுமான் மக்கி ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.

    • தேநீர் என்பது கேமிலியா சினேசிஸ் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும்.
    • தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர்.

    காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர்.

    தேநீர் என்பது பல வீடுகளில் மாலையிலும், காலையில் ஒரு முறையும் கட்டாயம் குடிக்க வேண்டிய பானமாக மாறிவிட்டது.

    இஞ்சி டீ, சுலைமான் டீ, பிளாக் டீ தொடங்கி மசாலா டீ, லெமன் டீ என தேநீர் வகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் படி ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.

    தேநீர் என்பது கேமிலியா சினேசிஸ் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர்.

    தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. சுமார் 5,000 ஆண்டுகள் சீனப் பேரரசர் ஷென் நங் தற்செயலாக தேயிலையைக் கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது. அவரது ஆட்களுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்து தண்ணீர் கொதிக்க வைக்கும்போது, காற்றில் பறந்த தேயிலை இலைகள் பானையில் விழுந்துள்ளது.

    இது தண்ணீருக்கு சுவையூட்டிய நிலையில் அதுவே உலகின் முதல் தேநீர் பானம் என்றானது. அன்றுதொட்டு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் தேயிலை வளர்ப்பு உலகம் முழுவதும் பரவி உள்ளது.

    தேயிலை வளர்ப்பு அதிகப்படியான பொருளாதார சந்தையாக மாறினாலும், இலங்கை, இந்தியா, மலேசியா என கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தை காரணமாக வைத்து தமிழர்கள் உட்பட பல இன மற்றும் மொழிக் குழுக்களை சேர்ந்த மக்கள் தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்த சரித்திரத்தையும் இந்நாளில் நினைவு கூற வேண்டியது அவசியமாகும்.

    ஐக்கிய நாடுகள் சபை 2019 இல் மே 21 ஆம் தேதியை ஒரு புதிய சர்வதேச தேயிலை தினமாக அறிவித்திருந்தாலும் 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட முக்கிய தேயிலை உற்பத்தி நாடுகளில் டிசம்பர் 15 ஆம் தேதி உலக தேநீர் தினமாக தனியே  அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

    • சாலையோரத்தில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
    • அந்த வாகனத்தை பள்ளி பஸ் நெருங்கியதும் தொலைவிலிருந்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஸ்தாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.

    இந்த பஸ், ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் வந்தபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனத்தைப் பள்ளி பஸ் கடந்து சென்றபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

    இந்த குண்டுவெடிப்பில் பள்ளி பஸ் சிக்கியது. இதில் பஸ்சில் இருந்த குழந்தைகள் படுகாயம் அடைந்து அலறினார்கள். உடனே சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர், மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். இந்த குண்டுவெடிப்பில் 4 குழந்தைகள் பலியானார்கள். 38 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சாலையோரத்தில் இருந்த ஒரு வாகனத்தில் வெடிபொருள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தை பள்ளி பஸ் நெருங்கியதும் தொலைவிலிருந்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இது ஒரு தற்கொலைத் தாக்குதல் ஆகும். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டு பிடிக்க தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது என்றார்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, அப்பாவி குழந்தைகளை குறிவைக்கும் மிருகங்கள் எந்த கருணையும் பெறத் தகுதியற்றவர்கள் என்று தெரிவித்தார்.

    • Azure ஹார்டுவேர் சிஸ்டம்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பொறியாளரான ஜோ லோபஸ் அவரை இடைமறித்தார்.
    • ட் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனரீதியாக அழிக்க உதவும் போது அமைதியாக இருக்க முடியாது என்று லோபஸ் கூறினார்.

    காசா மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் அரசுக்கு தங்கள் நிறுவனத்தின் ஏஐ மூலம் உதவி செய்வதை மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

    இந்நிலையில் காசாவில் இனப்படுகொலையை குறித்து கேள்வி எழுப்பி மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் உரையை இடைமறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திங்களன்று மைக்ரோசாப்ட் பில்ட் நிகழ்வில் நாதெல்லா முக்கிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    உரையின் போது, மைக்ரோசாப்டின் Azure ஹார்டுவேர் சிஸ்டம்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பொறியாளரான ஜோ லோபஸ் அவரை இடைமறித்து கேள்வி எழுபத் தொடங்கினார். மைக்ரோசாப்ட் பாலஸ்தீனியர்களை எப்படிக் கொல்கிறது என்பதைக் காட்ட முடியுமா? இஸ்ரேலிய போர்க்குற்றங்களை Azure எவ்வாறு ஆதரிக்கிறது என்பதைக் காட்ட முடியுமா? என்று அவர் கேள்வி கேட்டார்.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் அதிகாரிகள் லோபஸை அங்கிருந்து அகற்றினர். நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனரீதியாக அழிக்க உதவும் போது அமைதியாக இருக்க முடியாது என்று லோபஸ் கூறினார்.

    ×