என் மலர்
நீங்கள் தேடியது "நிர்வாண படம்"
- நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் "ஹனி டிராப்" மோசடி அதிகளவில் நடந்துவருகிறது. இதில் வாலிபர்கள் மட்டுமின்றி வயதானவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களும் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
அவமானம் கருதி பலர் பணத்தை இழந்த விவகாரத்தை வெளியே கூறுவதில்லை. இதனால் "ஹனி டிராப்" மோசடியில ஈடுபடும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டியபடி இருக்கிறது. இந்தநிலையில் வாலிபர் ஒருவர் "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
அவர் கூறிய புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு, மாவேலிக்கரையை சேர்ந்த கவுரி நந்தா என்ற 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வாலிபருடன், இளம்பெண் நட்பாக பழகி வந்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரை ஆசைவார்த்தை கூறி கோழிக்கோடு குந்த மங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்பேரில் அந்த வாலிபரும் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வாலிபரை அந்த இளம்பெண் நிர்வாண படங்கள் எடுத்துள்ளார்.
பின்பு அந்த படங்களை காண்பித்து இளம்பெண் கவுரி நந்தா, மேலும் அவருடன் இருந்த திருரங்கடி பனஞ்சேரியை சேர்ந்த அன்சிகா(28), மற்றும் அவரது கணவர் முகமது அபிப் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்தவாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கவுரி உள்ளிட்ட 3 பேரும் அந்த வாலிபரை தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்துள்ளனர்.
இதனால் அவர்களின் மீது அந்த வாலிபர், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- Video voyeurism-க்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி பேசினார்.
- பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக நான்சி மேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சியை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நான்சி மேஸ், அவையில் செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
நான்சி மேஸ் அவர் தனது நிர்வாணப் படத்தை அவையில் காட்டினார். அந்தப் புகைப்படத்தைக் காட்டி, தனக்கு வருங்காலக் கணவராக வர இருந்தவர் தனது அனுமதியின்றி ரகசியமாக தன் புகைப்படங்களை எடுத்ததாகக் நான்சி கூறினார்.
இந்த சம்பவம் நேற்று ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் அமர்வின் போது நடந்தது. அவைக் கூட்டத்தில் நான்சி மேஸ் Video voyeurism-க்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி பேசும்போது கருப்பு வெள்ளையாக பதிவான தனது நிர்வாண புகைப்படத்தை எடுத்துக் காட்டினார். அந்த படம் தனது அனுமதி இன்றி வீட்டில் வைத்து தனக்கு கணவராக வர இருந்த பேட்ரிக் பிரையன்ட் எடுத்தது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சுதந்திரம் என்பது ஒரு கோட்பாடு அல்ல. நீங்கள் தூங்கும்போது உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் படத்தை எடுக்க முடிந்தால் பின் அது சுதந்திரம் கிடையாது. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, ஒரு பாதிக்கப்பட்டவராகவும் பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.
Video voyeurism என்பது ஒரு தனிநபரின் அனுமதியின்றி தனிப்பட்ட பகுதியில் அவரைப் பதிவு செய்யும் செயலாகும்.
தனது முன்னாள் வருங்கால கணவர் பேட்ரிக் பிரையன்ட் தன்னை ரகசியமாக படம் பிடித்தது மட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக நான்சி மேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைத்தாலும், அதை தவறான செயலுக்கு பயன்படுத்தி பணம் பறிக்கும் செயல்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைனில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இளம்பெண்களின் படங்களை அவர்களுக்கு அனுப்பி அதன் மூலம் விபசாரம் செய்யும் கும்பல்கள் கேரளாவில் பல இடங்களில் சிக்கி உள்ளன. இது தொடர்பாக வரும் புகார்களை சைபர்கிரைம் போலீசார் விசாரித்து அந்த கும்பல்களை தொடர்து கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பேஸ்புக்கில் வெளியான இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை பார்த்து ஏமாந்து அவர்களை தேடிச் சென்ற வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சூர் அருகே தலச்சேரி பகுதியை சேர்ந்த இளம் என்ஜினீயர் ஒருவர் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். பேஸ்புக்கில் அவர் பார்வையிட்டு கொண்டிருந்த போது 2 இளம் பெண்கள் தங்களின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு இருந்தனர். மேலும் அதை பார்ப்பவர்கள் ஆசையை தூண்டும் வகையில் சில வாசகங்களை வெளியிட்டு தங்களது செல்போன் நம்பர்களையும் அதில் பதிவிட்டு இருந்தனர். இதை பார்த்ததும் சபலமடைந்த அந்த என்ஜினீயர் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது அவரிடம் ஒரு இளம்பெண் பேசினார். அவர் கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முகவரியை கூறி அங்கு வந்தால் தன்னை சந்திக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனால் அவரும் அந்த பெண் கூறிய முகவரிக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் அந்த என்ஜினீயரிடம் நெருக்கமாக அமர்ந்து அவரை மயக்க தொடங்கினார்கள்.
அப்போது திடீரென்று கதவு தட்டப்பட்டதால் அந்த பெண்கள் கதவை திறந்தனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். மேலும் அந்த வாலிபரை நிர்வாணமாக்கி 2 அழகிகளுடன் நெருக்கமாக நிற்க வைத்து செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
அப்போது அந்த பெண்கள் ஒன்றும் அறியாதவர்கள் போல கண்ணீர் விட்டு கதறினார்கள். தங்களை விட்டு விடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். உடனே 4 வாலிபர்களும் அந்த என்ஜினீயரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தையும், ஏ.டி.எம். கார்டையும் பறித்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கு ரூ.3 லட்சம் கொடுக்காவிட்டால் இந்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.
இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட என்ஜினீயர் கொடுங்கல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அங்கு நசீமா (வயது 26), சமீனா (26) என்ற 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த 2 பெண்களும் பேஸ்புக்கில் படங்களை போட்டு வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் என்பது தெரியவந்தது.
உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மோகன்(34), பாபு (35), சிங்கித் (29), அக்பர்ஷா (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல பல வாலிபர்களை ஏமாற்றி அவர்கள் பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






