VIDEO: அவையில் தனது நிர்வாண படத்தை காட்டிய டிரம்ப் கட்சி பெண் எம்.பி.. பாலியல் வன்கொடுமை புகார்

Video voyeurism-க்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி பேசினார். பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக நான்சி மேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
VIDEO: அவையில் தனது நிர்வாண படத்தை காட்டிய டிரம்ப் கட்சி பெண் எம்.பி.. பாலியல் வன்கொடுமை புகார்
Published on: 

அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சியை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நான்சி மேஸ், அவையில் செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

நான்சி மேஸ் அவர் தனது நிர்வாணப் படத்தை  அவையில் காட்டினார். அந்தப் புகைப்படத்தைக் காட்டி, தனக்கு வருங்காலக் கணவராக வர இருந்தவர் தனது அனுமதியின்றி ரகசியமாக தன் புகைப்படங்களை எடுத்ததாகக் நான்சி கூறினார்.

இந்த சம்பவம் நேற்று ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் அமர்வின் போது நடந்தது. அவைக் கூட்டத்தில் நான்சி மேஸ் Video voyeurism-க்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி பேசும்போது கருப்பு வெள்ளையாக பதிவான தனது நிர்வாண புகைப்படத்தை எடுத்துக் காட்டினார். அந்த படம் தனது அனுமதி இன்றி வீட்டில் வைத்து தனக்கு கணவராக வர இருந்த பேட்ரிக் பிரையன்ட் எடுத்தது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சுதந்திரம் என்பது ஒரு கோட்பாடு அல்ல. நீங்கள் தூங்கும்போது உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் படத்தை எடுக்க முடிந்தால் பின் அது சுதந்திரம் கிடையாது. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, ஒரு பாதிக்கப்பட்டவராகவும் பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

Video voyeurism என்பது ஒரு தனிநபரின் அனுமதியின்றி தனிப்பட்ட பகுதியில் அவரைப் பதிவு செய்யும் செயலாகும்.

தனது முன்னாள் வருங்கால கணவர் பேட்ரிக் பிரையன்ட் தன்னை ரகசியமாக படம் பிடித்தது மட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக நான்சி மேஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com