என் மலர்
உலகம்
- 2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.
- நிறைய பணம் சம்பாதிப்பதும், அதையெல்லாம் நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும்தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்றார்.
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
அவரது நிகர மதிப்பு தற்போது 1 பில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ. 8,300 கோடி) எட்டியுள்ளது. இதில் பரம்பரை சொத்து எதுவும் இல்லை. அதாவது, அவர் தனது 27 வயதிலேயே இந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சொந்தமாக சம்பாதித்தார்.
இளம் வயதிலேயே யூடியூபராக தனது பயணத்தைத் தொடங்கிய மிஸ்டர் பீஸ்ட், தனது புதுமையான சவால்கள், பெரிய அளவிலான பரிசுகள் மற்றும் தொண்டு முயற்சிகளுக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார்.
2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.
யூடியூப்பைத் தவிர, மிஸ்டர் பீஸ்ட் "பீஸ்ட் பர்கர்" என்ற துரித உணவு கடைகள் மற்றும் "ஃபீஸ்டபிள்ஸ்" என்ற சாக்லேட் நிறுவனத்தையும் வெற்றிகரமான வணிகங்களை நடத்தி வருகிறார். ஜூன் 2024 நிலவரப்படி, யூடியூப்பில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட நபர் என்ற சாதனையையும் மிஸ்டர்.பீஸ்ட் படைத்துள்ளார்.

"பீஸ்ட் பிலாந்த்ரோபி" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி பல சேவை திட்டங்களை நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு கண்பார்வை வழங்குதல், லட்சக்கணக்கான மரங்களை நடுதல் போன்ற திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
மிஸ்டர் பீஸ்ட், இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள ஒவ்வொரு பைசாவையும் நன்கொடையாக வழங்குவதாக முன்னதாக அறிவித்தார். நிறைய பணம் சம்பாதிப்பதும், அதையெல்லாம் நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும்தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
- எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு பொதுவான புரிதலுக்கு வர முடியாதா?
- யூனுஸின் ராஜினாமா அச்சுறுத்தலுக்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த வருடம் நடந்த மாணவர் போராட்டத்தால் அவாமி லீக் அரசின் ஆட்சி கழிவிந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் புதிதாக அமைந்த இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் முகமது யூனுஸ் நாட்டின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,
அனைத்துக் கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்காவிட்டால், பதவி விலகுவேன் என்று அவர் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான் வலியுறுத்தியுள்ளார். வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தேர்தலை நடத்துவதற்கான தெளிவான திட்டத்தைக் கோரி தனது போராட்டங்களைத் தொடங்கியுள்ளது.
இந்த சமீபத்திய அரசியல் சூழல் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் தன்னால் வேலை செய்ய முடியாது என யூனுஸ் தெரிவித்ததாக தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர் நஹீத் இஸ்லாம் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.
"ஐயா (யூனுஸ்) ராஜினாமா செய்தியைக் கேள்விப்பட்டோம். அதனால் அந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க நான் அவரை சந்திக்கச் சென்றேன். அவர் அதைப் பற்றி யோசித்து வருவதாகக் கூறினார். வேலை செய்ய முடியாத அளவுக்கு நிலைமை இருப்பதாக அவர் உணர்கிறார்" என்று நஹீத் இஸ்லாம் தெரிவித்தார்.
மேலும் யூனுஸ் தன்னிடம், "நான் பணய கைதியாக வைக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது. நான் இப்படிச் செயல்பட முடியாது. எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு பொதுவான புரிதலுக்கு வர முடியாதா?" என்று கூறியதாக நஹீத் தெரிவித்தார்.
மறுபுறம், யூனுஸின் ராஜினாமா அச்சுறுத்தலுக்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தேர்தல்கள் எப்போது நடத்தப்பட்டாலும் யூனுஸின் பதவிக்காலம் முடிவடையும்.
இந்த சூழலில், ராணுவத் தளபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதால் இதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களை தூண்டிவிட்டு புதிய அமைதியின்மையை உருவாக்க யூனுஸ் திட்டமிடுகிறாரா? என்ற ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர். .
- நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனருமான ஹபீஸ் சயீதும் கடந்த காலங்களில் இதே பாணியில் மிரட்டல்களை விடுத்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இந்தியாவை எச்சரித்துள்ளார்.
பஹலகாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாவதும் பாகிஸ்தான் மீது இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்தது.
அதன்படி பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை ஆறுகள் மூலம் செல்லும் நதிநீர் நிறுத்தப்படுவதால் அந்நாட்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.
எனவே நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதியில் தண்ணீர் ஓட வில்லை என்றால் ரத்தம் ஓடும் என அந்நாட்டு அரசியல் தலைவர் பிலாவல் பூட்டோ எச்சரிக்கை வைரலானது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அகமது ஷெரீப் சவுத்ரி, இந்தியாவைக் குறிப்பிட்டு, "நீங்கள் எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்" என்று பேசியிருக்கிறார்.
2008 மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனருமான ஹபீஸ் சயீதும் கடந்த காலங்களில் இதே பாணியில் மிரட்டல்களை விடுத்துள்ளார். அதே பாணியில் லெப்டினன்ட் ஜெனரல் பேசிய இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
- அபுதாபி சென்றடைந்த இந்திய எம்.பி.க்கள் குழு, அங்கு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை சந்தித்து பேசினர்.
- ஜப்பான் சென்றடைந்த சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர், ஜப்பான் வெளியுறவு மந்திரி தகேஷி இவாயாவைச் சந்தித்தது பேசினர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர் ஜப்பான் புறப்பட்டு சென்றனர். சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினர் ஐக்கிய அமீரகத்துக்கு சென்றனர்.
அபுதாபி சென்றடைந்த இந்திய எம்.பி.க்கள் குழு, அங்கு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை சந்தித்து பேசினர். அப்போது பயங்கரவாதத்தையும், அதன் மற்ற வடிவங்களையும் எதிர்த்துப் போராடும் இந்தியாவின் உறுதிப்பாட்டை விளக்கி கூறினர். மேலும் இந்தியா-அமீரகம் இடையேயான நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்தும் பேசியதாக அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள், உள்துறை மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவர் டாக்டர் அலி அல்னுவைமியையும், கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர் அகமது மிர் கூரியையும் சந்தித்து பேசினர்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தனது எக்ஸ் பதிவில், 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியாவின் தீர்க்கமான வெற்றியை நாங்கள் பெருமையுடன் பகிர்ந்து கொண்டோம், மேலும் பாகிஸ்தானிலிருந்து வெளிப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எடுத்துரைத்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபால் ஜப்பான் சென்றடைந்த சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர், ஜப்பான் வெளியுறவு மந்திரி தகேஷி இவாயாவைச் சந்தித்தது பேசினர். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கினர். அப்போது ஜப்பான் மந்திரி தகேஷி, இந்தியாவின் நிதானத்துக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
ஜப்பானின் முன்னாள் பிரதமரும் ஜப்பான்-இந்திய சங்கத்தின் தலைவருமான யோஷிஹைட் சுகா, டோக்கியோவில் உள்ள முன்னணி ஜப்பானிய சிந்தனையாளர்கள், ஜப்பானின் தேசிய பாதுகாப்புக்கான பிரதிநிதிகள் சபைக் குழுவின் தலைவரான தகாஷி எண்டோ ஆகியோரை இந்திய குழு சந்தித்து பேசியது.
இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றனர். ரஷியா சென்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷிய மந்திரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இந்த சந்திப்பின்போது ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறுவார்கள்.
நாளை ஸ்லோவேனியாவுக்குச் செல்வதற்கு முன்பு, இந்த குழுவினர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.
- சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களை டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.
- ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயில்கின்றனர்.
அமெரிக்காவில் பிரபாலான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது.
அதாவது, வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.
இந்த சூழலில் தற்போது, வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர் மீது டிரம்ப் தனது அடாவடி உத்தரவுகள் மூலம் தொடர்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
காத்மாண்டு:
இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று அதிகாலை 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.
நேபாளத்தில் சில தினங்களுக்கு முன் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சான்டியாகோ நகரில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்தது.
- இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியானது.
தனியாருக்குச் சொந்தமான அந்த சிறிய ரக விமானத்தில் 10 பேர் வரை பயணித்தாக சொல்லப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் திடீரென விழுந்தது. பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், பவர் லைன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1929ஆம் ஆண்டுக்குப் பிறகு வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
- சில இடங்களில் இன்னும் 30 செ.மீ. மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுயைாக பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் 30 செ.மீ. மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்தள்ளது. நாங்கள் இன்னும் மோசமான செய்திக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என மாநில தலைவர் கிறிஸ்டோபர் மின்ஸ் தெரிவித்துள்ளார்.
50 ஆயிரமம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தயாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ார். 1921 மற்றும் 1929 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் மாயமாகியுள்ளனர். 500 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.
- 2019ஆம் ஆண்டு இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
- உளவுத்துறை எச்சரித்த நிலையிலும், தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக உயர் அதிகாரிகள் மீது குற்ற்ச்சாட்டு.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தற்கொலைப் படைகள் மூலம் தேவாலயங்கள், முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உளவுத்துறை எச்சரித்தும், தாக்குதலை அரசு தடுக்க தவறிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் அப்போதை அதிபர் சிறிசேனா புலனாய்வுத்துறை இயக்குனர் நிலந்தா ஜெயவர்தனே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி 661 பேருக்கு 8.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக அட்டார்னி ஜெனரலுக்கான துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்த சிறிசேனா ஒரு குழுவை நியமித்தார். இந்த குழு தாக்குதல் குறித்த முன்கூட்டியே உளவுத்துறை அறிக்கைகளை புறக்கணித்ததாக சிறிசேனா மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர்.
- சூரிய ஒளியைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
அவர் உச்சி முதல் பாதம் வரை சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. சீனாவில் சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர்.

அதன்படி பெண்கள் அகன்ற விளிம்பு கொண்ட முகமூடிகள், சூரிய பாதுகாப்பு கையுறைகள், குளிர்விக்கும் முகமூடிகள் மற்றும் லேசான UV-எதிர்ப்பு ஹூடிகளைப் (தொப்பி வைத்த சட்டை) பயன்படுத்தி சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த பெண்ணும் இதனை பின்பற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மெத்தையில் திரும்பி படுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை சோதித்த டாக்டர்கள் அவருக்கு வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிகப்படியான சூரிய ஒளியைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளியை நீண்ட காலமாகத் தவிர்ப்பது எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடல் நிறத்திற்காக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள வேண்டாம் என சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
- கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
பிரபல சுற்றுலாத் தலமான யோலண்டாவிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும் 77 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- துப்பாக்கி சூடு சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அருங்காட்சியம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் வெளியிட்டுள்ள பதிவில்,
வாஷிங்டன் டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் 2 இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,
இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் நடக்கலாம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.






