என் மலர்
உலகம்
- ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
- ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிப் போரை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி உயர்வு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சீனா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நிலைமையை சற்று சுமூகமாகியது.
இந்நிலையில் ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.
முன்னதாக "இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" என ஆப்பிள் நிறுவனத்தை டிரம்ப் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பார்வையைக் கடந்து வைரலாக பரவி வருகிறது.
- நெட்டிசன்கள் பலரும் தந்தை அன்புக்கு நிகரில்லை என பாராட்டி வருகின்றனர்.
ஆண்களின் மனம் கல் போன்றது என பொதுவாக கூறுவர். ஆனால் தனது குழந்தைக்கு ஒரு துன்பம் என்றால் எந்தவொரு தந்தையும் மெழுகைப் போல உருகி விடுவார். அதுபோல ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி இணைய உலகில் வைரலாகியது.
அந்த வீடியோவில் ஒரு ஆண் தடுப்பூசி போடுவதற்காக தனது மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த அந்த குழந்தை தடுப்பூசி போடுவதற்காக நர்சு நெருங்கி வரவும் அழ ஆரம்பித்தது.
குழந்தைதான் அழுகிறது என்றால் அதற்கு போட்டியாக தந்தையும் அழ ஆரம்பித்தார். இது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பார்வையைக் கடந்து வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தந்தை அன்புக்கு நிகரில்லை என பாராட்டி வருகின்றனர்.
- பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
- அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நுப் டாங் என்ற அந்த பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பூனையுடன் போலீசார் கொஞ்சி விளையாடினர். அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடைபெற்ற சம்பவங்கள் தான் வினோதமானது.
அதாவது மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களை தாக்கியதாக கூறி அந்த பூனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பூனையின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அவர்களிடம் பூனையை ஒப்படைக்கும் முன்னர் போலியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிந்து பூனையை கைது செய்வதுபோல் நடித்தனர்.
குற்றவாளியின் இடத்தில் பூனையும், அதற்கு ஜாமின் பெறுவது போல் உரிமையாளர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதனை புகைப்படம் எடுத்த போலீசார் சமூகவலைதளத்தில் பதிவிட அது வைரலாகி லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்றுள்ளது.
- கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது.
ஒட்டாவா:
கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார். இதற்காக விசா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் இந்த ஆண்டு இதுவரை 30 ஆயிரத்து 640 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவு ஆகும்.
- சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிறுத்தினார்.
- இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது.
அமெரிக்காவில் பிரபாலான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.
வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.
இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.
- இதுதொடர்பான மசோதா டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
- அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 81 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 21 பேரும் வாக்களித்தனர்.
கோபன்கேஹன்:
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.
இதுதொடர்பான மசோதா டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 81 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 21 பேரும் வாக்களித்தனர். இதனால் ஓய்வூதிய வயது அதிகரிப்பு சட்டம் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக ஓய்வு பெறும் வயது உடைய நாடாக டென்மார்க் மாறி உள்ளது.
இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அங்கு ஓய்வு பெறும் வயது 67 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.
- காயம் அடைந்தவர்களின் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முனீச்:
ஜெர்மனியின் ஹம்பர்க் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கத்தியால் தாக்கியவரை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தாக்குதல் நடத்தியதன் நோக்கம், அவரது பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை ஜெய்சங்கர் சந்தித்தார்.
- இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.
பெர்லின்:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்படி, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு சென்ற ஜெய்சங்கர் ஜெர்மனிக்குச் சென்றார்.
அவர் ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பஹல்காம் தாக்குதல், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் கூறுகையில், ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இரு நாடுகள் இடையேயான ராணுவ தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
- துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கைதிகள் பரிமாற்றத்திற்கு இரு நாடுகளும் சம்மதம்.
- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றதாக அறிவித்திருந்தார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.
போர் தொடங்கி 3 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் சண்டை நிறுத்தப்படவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை. இருநாட்டிற்கும் இடையில் சண்டையை நிறுத்த முயற்சிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அதனடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா பரிந்துரை செய்தது. அத்துடன் ரஷியா மற்றும் உக்ரைனுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ரஷியா பரிந்துரைகளில் பல்வேறு மாற்றங்களை செய்ய நிபந்தனை விதித்தது.
இதற்கிடையே சண்டை தொடங்கிய பின்னர் முதன்முறையாக கடந்த வாரம் துருக்கியில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நேருக்நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. இருந்த போதிலும் சுமார் ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் போரின்போது கைது செய்யப்பட்டவர்களை இரு தரப்பிலும் இருந்து தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் முழுமையாக இந்த நடவடிக்கை முடியவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத உக்ரைன் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷியா உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றன என டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், உக்ரைன் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
- வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை டிரம்ப் விரும்பவில்லை.
- அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் கூறியதாவது:-
இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.
என்று டிரம்ப் கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகிறது. 2025 மார்ச் வரை, இந்தியாவில் $22 பில்லியன் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 60% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிக்குப் பதிலாக கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு.
- கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 90 நாட்கள் வரி விதிப்பு நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.
அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 50 சதவீதம் வரி விதிக்க விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்டு டிரம்ப் வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் 90 நாட்களுக்கு அதை நிறுத்தி வைத்தார். ஜூலை மாதம் தொடக்கத்தில் 90 நாட்கள் முடிவடையும். அதற்குள் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
- 70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம் என ராஜகோபாலன் கூறினார்.
- மக்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள்.
அபுதாபி:
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஸ்ரீராம் ராஜகோபாலன், தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16-ம் தேதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நான் முதலில் அதை நம்பவில்லை. நான் டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன், வென்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன். முதலில் என் கண்ணையே இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது.
70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம். இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு இதுபோன்ற ஒன்றை நான் சமாளித்ததில்லை.
எனக்கு தொண்டு செயல்களில் ஈடுபாடு உண்டு, புற்றுநோய் பலரின் வாழ்க்கையை, குறிப்பாக குழந்தைகளை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கிறது என்பதைக் காண்கிறேன். மேலும் முக்கியமான காரணங்களை ஆதரிக்க விரும்புகிறேன். கோவில்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதல் புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் வரை. செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன.
மக்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள். ஆனால் அதிர்ஷ்டம் சூத்திரங்களைப் பின்பற்றுவதில்லை. பொறுப்புடன் விளையாடுவது, உங்களால் முடிந்ததை வாங்குவது மற்றும் அனுபவத்தை அனுபவிப்பது மட்டுமே உத்தி. அதுதான் உற்சாகம்" என்று அவர் கூறினார்.






