கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதம் குறைவு

கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது.
கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதம் குறைவு
Published on

ஒட்டாவா:

கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார். இதற்காக விசா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் இந்த ஆண்டு இதுவரை 30 ஆயிரத்து 640 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவு ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com