என் மலர்tooltip icon

    உலகம்

    ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது- இலங்கை அரசு
    X

    ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது- இலங்கை அரசு

    • 2019ஆம் ஆண்டு இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
    • உளவுத்துறை எச்சரித்த நிலையிலும், தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக உயர் அதிகாரிகள் மீது குற்ற்ச்சாட்டு.

    இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தற்கொலைப் படைகள் மூலம் தேவாலயங்கள், முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    உளவுத்துறை எச்சரித்தும், தாக்குதலை அரசு தடுக்க தவறிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை முடிவில் அப்போதை அதிபர் சிறிசேனா புலனாய்வுத்துறை இயக்குனர் நிலந்தா ஜெயவர்தனே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி 661 பேருக்கு 8.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக அட்டார்னி ஜெனரலுக்கான துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்த சிறிசேனா ஒரு குழுவை நியமித்தார். இந்த குழு தாக்குதல் குறித்த முன்கூட்டியே உளவுத்துறை அறிக்கைகளை புறக்கணித்ததாக சிறிசேனா மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×