search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
    X
    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

    லைவ் அப்டேட்ஸ்: ஒரு காமெடியன் திருப்பி அடிப்பான் என யாரும் நினைக்கவில்லை- உக்ரைன் அதிபர்

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    4.6.2022

    15:30: உக்ரைனில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, தூதரக ரீதியிலான தீர்வைக் காண ரஷியா அவமானப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் அவசியம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். மேலும், மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் மத்தியஸ்தம் வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

    உக்ரைனுக்கு ராணுவ ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பிரான்ஸ் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் இதுவரை மற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களைப் போல அரசியல் ஆதரவை மேக்ரான் வழங்கவில்லை. 

    15:00: மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் என்று ரஷியா குற்றம்சாட்டி உள்ளது. மேலும், உக்ரைனை நிராயுதபாணியாக்கி, தேசியவாதிகளை அகற்றுவதற்கான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் போக்கை மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் மாற்றாது என்றும் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 

    இதற்கிடையே சீவிரோடோனெட்ஸ்க் நோக்கி சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கார் டிரைவர் உயிரிழந்தார். அதில் பயணித்த 2 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.

    13:30: சீவிரோடோனெட்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவம் முன்னேறுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குவதை தடுக்கவும், செவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களை ரஷியப் படைகள் தகர்த்து வருவதாக  லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். 

    10.36: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாளை எட்டியது. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மடிந்துவிடும் என பலர் நினைத்தனர். உலக தலைவர்கள் என்னை தப்பி ஓட அறிவுறுத்தினர். ஆனால் மக்களிடம் நகைச்சுவை நடிகனாக அறிமுகமான நான், இன்று உக்ரைன் அதிபராக பிரமாண்ட ரஷிய படைகளை எதிர்த்து அடிப்பேன் என யாரும் எதிர்பார்க்கவில்லை’ என கூறினார்.

    04.30: உக்ரைன் மீது ரஷியா நடத்திய போரால் உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் சின்னாபின்னமாகி உள்ளன.

    உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்நாட்டின் மந்திரிசபை மதிப்பிட்டுள்ளது. 600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என உக்ரைன் மந்திரிசபை தெரிவித்துள்ளது.

    00.50: ரஷிய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போலந்தில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

    Live Updates

    • 4 Jun 2022 10:47 PM GMT

      நடப்பாண்டில் எரிசக்தி ஏற்றுமதியில் பெரிய முன்னேற்றத்தை ரஷிய அடையும் என்று அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், தெரிவித்துள்ளார். செர்பியா தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ரஷியாவின் எண்ணெய் ஏற்றுமதியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று கூறினார். அதற்கு மாறாக இந்த ஆண்டு எங்கள் எரிசக்தி வளங்களின் ஏற்றுமதியிலிருந்து லாபத்தை கணிசமாக அதிகரித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 4 Jun 2022 10:40 PM GMT

      உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை ரஷியா அழித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷிய தேசிய தொலைக்காட்சிக்கு புதின் அளித்த பேட்டியில் உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்காவின் நடவடிக்கையை ரஷியா எளிதாக சமாளித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை டஜன் கணக்கில் ரஷியா அழித்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 4 Jun 2022 10:35 PM GMT

      உக்ரைன் தலைநகர் கீவ்வில் இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து உக்ரைனுக்கான புதிய இந்திய தூதர் ஹர்ஷ் ஜெயின், அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கையால் உக்ரைனும் இந்தியாவும் ஒன்றுபட்டுள்ளன என்று ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். பலம் என்பது பயம் இல்லாத நிலையில் உள்ளது என்றும், நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கையில் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள், பின்னர் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள், பின்னர் அவர்கள் உங்களுடன் சண்டையிடுகிறார்கள், பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை ஜெலன்ஸ்கி மேற்கோள் காட்டியதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • 4 Jun 2022 10:26 PM GMT

      உக்ரைன் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. கருங்கடல் துறைமுகமான ஒடேசா அருகே ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற உக்ரைன் ராணுவ போக்குவரத்து விமானத்தை ரஷ்யாவின் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் வெளிநாட்டு ராணுவ பயிற்சியாளர்கள் பணியாற்றிய பீரங்கி பயிற்சி மையத்தையும் ரஷிய ஏவுகணைகள் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×