search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சீன அதிபர் ஜி ஜின்பிங்
    X
    சீன அதிபர் ஜி ஜின்பிங்

    பெருமூளை நோயால் பாதிக்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்- வெளியான பரபரப்பு தகவல்

    பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே ஜி ஜின்பிங், வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
    பீஜிங்:

    சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிகப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெருமூளை அனிரிசம் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்  ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சைக்குப் பதில் அவர் பாரம்பரிய சீன மருந்துகளை எடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே ஜி ஜின்பிங், வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். அப்போதில் இருந்தே அவரது உடல்நிலை குறித்து பல யூகங்கள் எழுப்பப்பட்டன. 

    2019ம் ஆண்டு இத்தாலி சென்றபோது தளர்வாக நடந்து சென்றது, அதே ஆண்டு பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின்போது அமர சிரமப்பட்டது, 2020ம் ஆண்டு சென்செனில் நடந்த பொதுக்கூட்டத்தில் கால தாமதமாக வந்து இருமிக்கொண்டே பேசியது என அடுத்தடுத்த நிகழ்வுகள் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவலை ஓரளவு உறுதி செய்தன.
    Next Story
    ×