search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    துப்பாக்கிச்சூடு
    X
    துப்பாக்கிச்சூடு

    அமெரிக்காவின் மிசிசிபி நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

    அமெரிக்காவின் மிசிசிபி நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    மிசிசிபி:

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  
     
    இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவின் மிசிசிபி நகரில் மட்பக்ஸ் என்ற பெயரில் நடைபெற்ற உணவு திருவிழாவில் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்தார். அவர் அங்கு திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மிசிசிபி புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

    Next Story
    ×