search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அதிபர் ஜோ பைடன்
    X
    அதிபர் ஜோ பைடன்

    உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் புதின் பொருளாதார தடையை சந்திப்பார் - அதிபர் ஜோ பைடன்

    ரஷ்யா படைகளைக் குவித்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    வாஷிங்டன்:

    ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளைக் குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு நோட்டோ ஆதரவளிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சில தினங்களுக்கு முன் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் ரஷ்யா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரேனியர்களுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை ஏற்கனவே அனுப்பியுள்ளேன்.

    உக்ரைனுக்குள் ரஷ்யா மேலும் முன்னேறினால், நான் ஏற்கனவே உறுதியளித்தபடி பொருளாதார தடைகளை புதின் சந்திப்பார் என தெரிவித்தார்.

    Next Story
    ×