search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இம்ரான் கான்
    X
    இம்ரான் கான்

    பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தியாவை விட சிறப்பாக உள்ளது- இம்ரான் கான் சொல்கிறார்

    எனது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளை விட குறிப்பாக இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவருவதாக அந்நாட்டு எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். பிரதமர் இம்ரான் கான் அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் இந்தியாவை விட சிறப்பாக உள்ளது என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடந்த வர்த்தக மற்றும் தொழில் துறை உச்சி மாநாட்டில் இம்ரான் கான் பேசியதாவது.-

    உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் பொருட்களின் விலை இன்னும் மலிவாக உள்ளது. மற்ற நாடுகளை விட பாகிஸ்தானில் இன்னும் எண்ணை விலை குறைவாகவே உள்ளது. அவர்கள் (எதிர்க் கட்சிகள்) எங்களை திறமையற்றவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் எங்களது அரசாங்கம் அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் நாட்டை காப்பாற்றுகிறது.

    எனது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளை விட குறிப்பாக இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய பயணி

    Next Story
    ×