search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான்
    X
    ஆப்கானிஸ்தான்

    காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

    இதில் பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதலில் 13 பேர் இறந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது. குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது.

    காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் காரோஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

    இந்நிலையில், காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கப் படைவீரர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×