search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஒரு வாரத்தில் உலகளவில் 40 லட்சம் பேருக்கு கொரோனா

    இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது 130 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது.
    ஜெனீவா:

    உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் 40 லட்சம் பேருக்கு  கொரோனா வைரஸ் தாக்கியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் தொற்று கூடியதே இதற்கு காரணம் ஆகும்.

    ஒரு மாதமாகவே தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், அதே நேரத்தில் உலகளவில் சாவு விகிதம் 8 சதவீதம் சரிந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது 130 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது. ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது.

    Next Story
    ×