search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்யும் இங்கிலாந்து

    தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    லண்டன்:

    இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்து-இந்தியா இடையிலான வர்த்தகம் ரூ.238 கோடியாக இருந்தது.

    இந்த சூழலில் 2030-ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. கடந்த மே மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே காணொலி காட்சி வாயிலாக நடந்த உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவரும் விரிவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர்.

    இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தின் அடையாளமாக கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை குறிப்பிட்டு இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×