search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்சங்கர்
    X
    ஜெய்சங்கர்

    ஜி 20 மந்திரிகள் மாநாடு - மத்திய மந்திரி ஜெய்சங்கர் இத்தாலி பயணம்

    கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
    புதுடெல்லி:

    ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்குச் செல்கிறார்.

    இதுகுறித்து, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

    அவர் கூறுகையில், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் நாளை (இன்று) கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார். கடந்த 2003-ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் மத்திய வெளிவிவகார மந்திரி அளவிலான பயணம் இதுவாகும்.

    25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் கிரீஸ் நாட்டின் வெளிவிவகார மந்திரியுடன், ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், அவர் இத்தாலி நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    இதில், ரோம் நகரில் நடைபெறும் ஜி20 மந்திரிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். ஜி20 மந்திரிகள் உச்சி மாநாடு 2021ல் வெளிவிவகார மந்திரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன.
    Next Story
    ×