search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெப்பத்தை பரிசோதிக்கும் ஊழியர்
    X
    வெப்பத்தை பரிசோதிக்கும் ஊழியர்

    உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 26 லட்சத்தைத் தாண்டியது

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.70 கோடியைக் கடந்துள்ளது
    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

    இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.70 கோடியைக் கடந்துள்ளது.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.27 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.18 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×