search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உருமாறிய கொரோனா தொற்றையும் தற்போதைய தடுப்பூசிகள் தடுக்கும் - இங்கிலாந்து மந்திரி தகவல்

    உருமாறிய கொரோனா தொற்றுக்களை தற்போதைய தடுப்பூசிகளே தடுக்கும் என இங்கிலாந்து தடுப்பூசித்துறை மந்திரி நதிம் சகாவி தெரிவித்து உள்ளார்.
    லண்டன்:

    கொரோனா வைரஸ் சீனாவின் உகானில் இருந்து தோன்றிய நிலையில், தற்போது அதன் உருமாற்றம் பெற்ற பல்வேறு வடிவங்கள் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாக இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பல வகையில் உருமாறிய கொரோனா தொற்றுகள் காணப்படுகின்றன.

    கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் மேற்படி உருமாற்றம் பெற்ற வைரஸ்களையும் தடுக்குமா? என்ற கேள்வி மருத்துவ வட்டாரங்களில் எழுந்துள்ளன.

    ஆனால் இந்த உருமாறிய கொரோனா தொற்றுக்களை தற்போதைய தடுப்பூசிகளே தடுக்கும் என இங்கிலாந்து தடுப்பூசித்துறை மந்திரி நதிம் சகாவி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாக்களுக்கு எதிராக, குறிப்பாக இவை தீவிர நோயாகவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்போதோ வீரியமாக இருக்காது என்பது மிகவும் அரிது. எனவே இது ஒரு நல்ல செய்தி’ என்று தெரிவித்தார்.

    உலக அளவில் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றுகள் தற்போது சுமார் 4 ஆயிரம் இருப்பதாக கூறிய அவர், எனவே அவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல் திறனை அதிகரிப்பது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறினார்.
    Next Story
    ×