search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - வங்காளதேசத்தை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்

    அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பாதிப்பு பட்டியலில் வங்காளதேசத்தை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்.
    இஸ்லாமாபாத்:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
     
    பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 412 ஆக உள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11,295 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் வங்காளதேசத்தை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் தற்போது 30-வது இடத்தில் உள்ளது. 
    Next Story
    ×