search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜப்பானில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை

    ஜப்பானில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
    டோக்கியோ:

    ஜப்பானில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 7-ந்தேதி முதல் அங்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

    அதேநேரம் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரம், தொழிலாளர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அந்த வகையில் தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற மறுத்தால் அவருக்கு சுமார் ரூ.7 லட்சம் வரை அபராதமோ அல்லது 1 ஆண்டு சிறை தண்டனையோ விதிக்கப்படும். அதைப்போல நோயாளிகளுடனான தொடர்பாளர்களை கண்டறிவதில் இடையூறு ஏற்படுத்துவோருக்கு ரூ.3½ லட்சம் வரை அபராதமோ அல்லது 6 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையோ விதிக்கப்படும்.

    இந்த தண்டனைகளுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
    Next Story
    ×