search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பிடன்
    X
    ஜோ பிடன்

    அமெரிக்க அதிபர் தேர்தல்- விஸ்கான்சின் மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி

    அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்கான்சின் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
    வாஷிங்டன்:

    கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு  நடைபெற்றது.
     
    இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 218 வாக்குகள் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்கான்சின் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விஸ்கான்சினில் ஜோ பிடனுக்கு 49.9 சதவீதமும், டிரம்புக்கு 48.5 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அங்கு 10 இடங்களை கைப்பற்றியதன் மூலம் 248 இடங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்.

    ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ் மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
    Next Story
    ×