search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அதிரும் அமெரிக்கா- தேர்தல் நாளில் 93 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: 1190க்கும் அதிகமானோர் பலி

    அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் நாளன்று அங்கு 93 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கி வருகிறது.

    தேர்தல் நாளன்று அங்கு 93 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 62.32 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 32 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×