search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள்
    X
    கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள்

    அமெரிக்காவை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 83 லட்சத்தை கடந்தது.

    அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 83 லட்சத்தைத் தாண்டியுள்ளது
    வாஷிங்டன்:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83 லட்சத்தைக் கடந்துள்ளது.

    மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தைக் கடந்துள்ளது.
    Next Story
    ×