என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரம்: பெண் கைது
Byமாலை மலர்21 Sep 2020 2:05 PM GMT (Updated: 21 Sep 2020 2:05 PM GMT)
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா- கனடா எல்லையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் ‘ஆப்சைட் ஸ்கிரீனிங்’ முறையில் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டு ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி டிரம்புக்கு வந்த ஒரு பார்சல் வழக்கம்போல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த பார்சல் வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே அதிகாரிகள் அதனைத் தடுத்து சோதித்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால், பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்.பி.ஐ.) சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஜனாதிபதி டிரம்புக்கு அனுப்பப்பட்ட பார்சலில், ‘ரிச்சின்’ என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரம்ப் பெயரிட்ட பார்சல் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என்பது குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கு ரைசின் விஷப்பொருள் அடங்கிய பார்சலை அனுப்பியதாக பெண் ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்கா - கனடா எல்லையில் கைதான அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×