search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார்
    X
    அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார்

    ரஷிய தடுப்பூசி மீது அமெரிக்க மந்திரி சந்தேகம்

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா கொண்டு வந்துள்ள நிலையில் அதுகுறித்த சந்தேகத்தை அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார் கேள்வி எழுப்பி உள்ளார்.
    தைபே:

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா கொண்டு வந்துள்ளது. ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் பற்றிய தரவுகள் வெளியிடப்படாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார், அதுகுறித்த சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

    இதுபற்றி தைபேயில் அவர் கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, முதலில் யார் உருவாக்குகிறார்கள் என்பதற்கான போட்டி அல்ல” என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “அமெரிக்காவில் 2 மருந்து நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மூன்றாவது கட்ட சோதனையை எட்டி உள்ளன. ஆனால் ரஷிய தடுப்பூசி எந்த தகவலையும் வெளியிடாமல் அந்த நிலைக்குள் நுழைகிறது. அமெரிக்க தடுப்பூசி செயல்முறைகள், தங்கம் போன்ற தரமான, பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை கோடிக்கணக்கான டோஸ்கள் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
    Next Story
    ×