search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரஷியாவில் உள்ள ஒல்கா நதி
    X
    ரஷியாவில் உள்ள ஒல்கா நதி

    ரஷியா - நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி

    ரஷியாவில் உள்ள நதியில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மாஸ்கோ:

    தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் ரஷிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்களில் மருத்துவக்கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், ரஷியாவில் தங்கி மருத்துவக்கல்வி பயின்றுவரும் தமிழக மாணவர்களில் 4 பேர் அந்நாட்டின் மையப்பகுதியில் பாய்ந்தோடும் ஒல்கா நதியை பார்வையிட சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாணவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

     உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

    நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடலை ரஷியாவில் இருந்து தமிழகம் கொண்டுவர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் முதலமைச்சர் பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    Next Story
    ×