search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பிரேசிலில் மட்டும் 97 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கொரோனாவில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

    அமெரிக்கா - 1,61,592
    பிரேசில் - 97,418
    மெக்சிகோ - 48,869
    இங்கிலாந்து - 46,364
    இந்தியா - 39,795 
    இத்தாலி - 35,181
    பிரான்ஸ் - 30,305
    ஸ்பெயின் - 28,499
    பெரு - 20,007
    Next Story
    ×