search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    1 கோடியே 82 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்

    உலகம் முழுவதும் 1 கோடியே 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 82 லட்சத்தை கடந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

    அமெரிக்கா - 47,63,609
    பிரேசில் - 27,33,677
    இந்தியா - 17,50,724  
    ரஷியா - 8,50,870

    Next Story
    ×