search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா பயணி
    X
    சுற்றுலா பயணி

    பாதுகாப்பான 14 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி - ஐரோப்பிய யூனியன்

    கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
    மாஸ்கோ:

    கொடூர கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. நோய் பரவலை தடுக்க மற்ற நாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருந்தது. தற்போது சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் நோயின் தீவிரம் சற்றுகுறைந்து காணப்படுகிறது.

    இந்தநிலையில் நோய் பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து, துனிசியா, உருகுவே, மான்டெனக்ரோ ஆகிய நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

    இந்த பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம்பெறவில்லை. எனவே இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய யூனியனுக்கு செல்ல அனுமதி இல்லை.
    Next Story
    ×