search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான்கான்
    X
    இம்ரான்கான்

    ஒசாமா பின்லேடனை தியாகி என குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்- வலுக்கும் எதிர்ப்பு

    பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை வெளியிட்டு இருந்த அறிக்கையில் பயங்கரவாதிகளின் சொர்க்கபூமியாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய விதத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. நமது நாட்டில் உள்ள அபோதாபாத் பகுதிக்குள் புகுந்து அமெரிக்கர்கள் பின்லேடனை கொன்றபோது நாங்கள் வருந்தினோம். இதை தொடர்ந்து பின்லேடன் தியாகியாகி விட்டார் என கூறினார்.

    இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து எதிர்க்கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பிரதமர் பின்னடைவை சந்தித்தார்.

    ஒசாமா பின்லேடனை இன்று தியாகியாக அறிவித்து இம்ரான்கான் வரலாற்றில் சிக்கியுள்ளார் என்று முன்னாள் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    "உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சமீபத்திய பயங்கரவாதத்தின் காரணமாக ஏற்படும் பாகுபாடுக்கு எதிராக போராடுகிறார்கள் - எங்கள் பிரதமர் பின்லேடனை இஸ்லாத்தின் தியாகி என்று அழைப்பதன் மூலம் அதை மேலும் மோசமாக்கி உள்ளார் என பாகிஸ்தான் சமூக ஆர்வலர் மீனா கபீனா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×