search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு கவசம்
    X
    பாதுகாப்பு கவசம்

    இங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு

    பி.பி.இ. சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு தெரிவித்த இங்கிலாந்து அரசின் உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்திய டாக்டர்கள் பலரும் முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அங்கு சிக்கன நடவடிக்கையாக, பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஆபத்தான உத்தரவு ஆகும். ஏனெனில், மீண்டும் மீண்டும் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துகிறபோது அதனூடே கொரோனா வைரஸ் ஊடுருவி டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடும். ஏற்கனவே இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டனர்.

    பாதுகாப்பு உடையில் மருத்துவர்கள்


    இந்த விவகாரத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் தம்பதியர் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் டாக்டர் நிஷாந்த் ஜோஷி, மினால் விஸ் ஆவார்கள். மினால் விஸ் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த மாதமே இவர்கள் இங்கிலாந்து அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில் சில கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சுகாதாரத்துறையின் பதில்களை கோரினர்.

    ஆனால் அதற்கு அவர்களுக்கு கிடைத்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவர்கள் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். சுய பாதுகாப்பு கவசங்களின் தேவையை குறைக்கவும், அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் வழிநடத்துகிற அரசின் வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த தம்பதியர் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளனர்.
    Next Story
    ×