search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரிஸ் ஜான்சன்
    X
    போரிஸ் ஜான்சன்

    இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிப்பு - பிரதமர் போரிஸ் ஜான்சன்

    இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
    லண்டன்:

    சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
    இந்த வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, 

    கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மாநாடு போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த வைரசின் தொற்று மையமாக அந்த நாடு ஆகி விட்டிருக்கிறது.

    இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

    இங்கிலாந்தில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களுக்கும் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

    பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. மேலும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் கூடும் பொது இடங்கள் திறக்கப்பட உள்ளன என அறிவித்துள்ளார்.
    Next Story
    ×