search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் காட்சி (கோப்பு படம்)
    X
    பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் காட்சி (கோப்பு படம்)

    31 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்துள்ளது.
    ஜெனீவா:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 31 லட்சத்து 18 ஆயிரத்து 871 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 55 ஆயிரத்து 460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 381 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    கோப்பு படம்

    கொரோனாவில் இருந்து 9 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

    அமெரிக்கா - 10,27,024
    ஸ்பெயின் - 2,32,128
    இத்தாலி - 2,01,505
    பிரான்ஸ் - 1,65,842
    இங்கிலாந்து - 1,61,145
    ஜெர்மனி - 1,59,431
    துருக்கி - 1,14,653
    ரஷியா - 93,558
    ஈரான் - 92,584
    சீனா - 82,836
    பிரேசில் - 68,289
    கனடா - 68,289
    பெல்ஜியம் - 47,334
    நெதர்லாந்து - 38,416
    சுவிட்சர்லாந்து - 29,264
    இந்தியா - 29,974
    பெரு - 28,699
    பொர்ச்சுகல் - 24,322
    ஈக்வடார் - 24,258
    சவுதி அரேபியா - 20,077
    Next Story
    ×