என் மலர்

  செய்திகள்

  விமான விபத்து (கோப்புப்படம்)
  X
  விமான விபத்து (கோப்புப்படம்)

  அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது- 3 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  நியூயார்க்:

  உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடானா அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி திணறி வருகிறது. அந்த நாடு கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், முதல் இடத்தில் உள்ளது.

  அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், அந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்த கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் பல இடங்களில் மக்கள் ஊரடங்கை பொருட்படுத்தாமல் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 10 வயது மகனுடன் தங்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில் நெவாடா மாகாணத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

  இந்த விமானம் நெவாடா மற்றும் உட்டா மாகாணங்களின் எல்லையில் உள்ள கோஷூட் பள்ளத்தாக்கு பகுதிக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டது.

  இதனால் விமானம் நடுவானில் குலுங்கியது. இதையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து, அங்குள்ள சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சித்தார்.

  ஆனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கி அதிவேகத்தில் சென்றது. பின்னர் விமானம் சாலையோரம் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது.

  இந்த கோரவிபத்தில் கணவன், மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது பற்றி தகவல் அறிந்து சென்ற மீட்பு குழு அவர்களின் உடல்களை மீட்டது.

  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெவாடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் விமான நிலையத்துக்குள்ளேயே விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 2 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது. 
  Next Story
  ×